அலோர் காஜா: கடந்த சனிக்கிழமையன்று மச்சாப் பகுதியில் உள்ள டூரியான் துங்கால் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகில் ஒரு பீப்பாயில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மனிதர்களுடையதுதான் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அலோர் காஜா காவல் துறைத் தலைவர் அஹ்மத் அபு பக்கர் வெளியிட்ட அறிக்கையில், இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய நிலையில் மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை. உயிரிழந்தவரின் பாலினத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்று கூறிய அவர், இன்று இரண்டாவது நாளாக உடற்கூறு ஆய்வு தொடரும் என்றும் குறிப்பிட்டார். நீர்த்தேக்கத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மூன்று நபர்களால் கடந்த சனிக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில் அந்தப் பீப்பாய் கண்டெடுக்கப்பட்டது.



