ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கும் அமெரிக்கப் படைகள் வழங்கி வரும் பாதுகாப்புக்கான செலவை பயனடையும் பிற நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா பல தலைமுறைகளாகத் தனது சொந்த நலனை விட பிற நாடுகளின் நலனுக்காகவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் வழியே எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதல் நிலவரம் முடிந்த பிறகு, இதுவரை அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யாத உலக நாடுகள் இந்த செலவுகளைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஈரானுடனான இராணுவ மோதல் விரைவில் முடிவுக்கு வரும், அதன் பிறகு எண்ணெய் விலையும் வேகமாகக் குறையும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஈரான் அமைதிப் பேச்சுக்குத் தயாராக உள்ளதாகவும், அதற்கான தூதரக அளவிலான பேச்சுகளில் அமெரிக்கா பங்கேற்பதா வேண்டாமா என்பதை தான் முடிவு செய்யவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (a)

