• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TCS, Infosys, HCL: ஸ்டிக்கர் ஒட்டும் ஐடி நிறுவனங்கள்.. ஏஐ வைத்து செய்யும் பூச்சாண்டி வேலை..! | TCS, Infosys, HCL: Rebranding Old Software Jobs as ‘AI Roles’? Inside the IT Industry’s Latest Hiring Controversy

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TCS, Infosys, HCL: ஸ்டிக்கர் ஒட்டும் ஐடி நிறுவனங்கள்.. ஏஐ வைத்து செய்யும் பூச்சாண்டி வேலை..! | TCS, Infosys, HCL: Rebranding Old Software Jobs as ‘AI Roles’? Inside the IT Industry’s Latest Hiring Controversy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TCS, Infosys, HCL: ஸ்டிக்கர் ஒட்டும் ஐடி நிறுவனங்கள்.. ஏஐ வைத்து செய்யும் பூச்சாண்டி வேலை..!

ஏஐ தொழில்நுட்பம் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், உருவாக்கப்படும் என ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனங்களும் கூறிவரும் வேளையில் வேலைவாய்ப்பு சந்தையில் தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்தால் பழைய வேலைவாய்ப்புகளுக்கு புதிதாக ஏஐ ஸ்டிக்கர் ஒட்டி புதிய ஏஐ வேலைவாய்ப்புகளாக அறிவிக்கப்படுவது போல் உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

ஐடி சேவை துறையில் ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இத்தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியும் என அனைத்து தரப்பினரும் கூறி வரும் வேளையில் ஒவ்வொரு ஏஐ மாடல் நிறுவனங்களும் பல்வேறு சலுகையுடன் மெகா கூட்டணி ஒப்பந்தத்தை செய்து வருகிறது.

TCS, Infosys, HCL: ஸ்டிக்கர் ஒட்டும் ஐடி நிறுவனங்கள்.. ஏஐ வைத்து செய்யும் பூச்சாண்டி வேலை..!

இந்த நிலையில் ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பழைய சாப்ட்வேர் டெவலப்மென்ட், டெஸ்டிங், மெயின்டனென்ஸ் மற்றும் பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் வேலைவாய்ப்புகளை ஏஐ ஸ்டிக்கர் ஒட்டி ஏஐ வேலைவாய்ப்புகளாக மாற்றி வருகிறது.

இதனால் இந்திய ஐடி சேவை துறையில் ஏஐ அடிப்படையிலான முழுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலை உருவாகியுள்ளது, இதனால் 300 பில்லியன் டாலர் ஐடி சேவை துறை மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவில் ஏஐ ஏஜெண்ட்களை பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் 8900 forward-deployed engineers உருவாக்கும் பணியிலும் டிசிஎஸ் இறங்கியுள்ளது, இதேபோல் இன்போசிஸ் நிறுவனமும் 6000 forward-deployed engineers-களை நியமித்து ஏஐ பயன்பாட்டை நிறுவனத்திலும், தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையிலும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

ஆனால் இது முழுவீச்சில் துவங்கவில்லை என ஐடி துறை வல்லனர்களும், staffing நிறுவன ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் Wanted என அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வேலைவாய்ப்பு விபரத்தில் ஏஐ மற்றும் ஏஐ தொடர்பான சொற்கள் அதிகமாக இருந்தாலும், அவை பெரும்பாலும் சாதாரண சாப்ட்வேர், டேட்டா, கிளவுட், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் பணியாகவே உள்ளது என Bernstein ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் தற்போகு 3500க்கும் அதிகமான ஏஐ வேலைவாய்ப்புகளுக்கு ஆட்களை தேடுகின்றனர். மேலும் இவர்கள் தேடும் பணிகளுக்கான பதிவி பெரும்பாலும் technical lead, AI content analysts மற்றும் GenAI consultants என்ற பெயர்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஏஐ வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமாக டிசிஎஸ்-ல் 604 வேலைவாய்ப்புகள், இன்போசிஸ்-ல் 1340 வேலைவாய்ப்புகள், HCLTech-ல் 1376 வேலைவாய்ப்புகள், விப்ரோ-வில் 350-க்கும் அதிகமான AI சார்ந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. டெக் மஹிந்திராவில் வெளியிடப்பட்ட 61 பணிகளில் 29 பணிகள் AI தொடர்புடையவை.

ஆனால் பணிகள் சாதாரண ஐடி ஊழியர்கள் செய்யும் பணியாகவே உள்ளது, இப்படியிருக்கும் வேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் முதலீட்டாளர்களையும், சந்தையில் அவர்களுடைய பெயரை பெருமையோடு காட்ட ஏஐ பெயரில் பழைய வேலைகளுக்கு ஆட்களை எடுக்கிறார்களா என்ற கேள்வி சந்தையில் எழுந்துள்ளது.

Share This Article

English summary

TCS, Infosys, HCL: Rebranding Old Software Jobs as ‘AI Roles’? Inside the IT Industry’s Latest Hiring Controversy

TCS, Infosys, HCL: Rebranding Old Software Jobs as ‘AI Roles’? Inside the IT Industry’s Latest Hiring Controversy — ஸ்டிக்கர் ஒட்டும் ஐடி நிறுவனங்கள்.. ஏஐ வைத்து செய்யும் பூச்சாண்டி..!

Story first published: Monday, September 14, 2026, 17:03 [IST]

Other articles published on Sep 14, 2026

Read More

Previous Post

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! கயிறு கட்டி மக்களை மீட்ட பொதுமக்கள். பெரம்பலூர் பச்சைமலையில் பரபரப்பு | Perambalur Cloudburst: Pachamalai Flash Floods in Streams, Locals Rescue People With Ropes

Next Post

கினபாலு மலையில் 8 நாட்கள் போராட்டம்: “எனக்காக 40 பேர் உயிரைப் பணயம் வைத்தனர்” — குரோஷிய மலையேற்ற வீரர் உருக்கம்!” | Makkal Osai

Next Post
கினபாலு மலையில் 8 நாட்கள் போராட்டம்: “எனக்காக 40 பேர் உயிரைப் பணயம் வைத்தனர்” — குரோஷிய மலையேற்ற வீரர் உருக்கம்!” | Makkal Osai

கினபாலு மலையில் 8 நாட்கள் போராட்டம்: "எனக்காக 40 பேர் உயிரைப் பணயம் வைத்தனர்" — குரோஷிய மலையேற்ற வீரர் உருக்கம்!" | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin