டாடா சன்ஸ்-ஐ விட்டுத்தள்ளுங்க.. பங்குச்சந்தையின் மொத்த டார்கெட்டும் டாடா கெமிக்கல்ஸ் தான்.. ஏன் தெரியுமா..?
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வேளையில் டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் 7 டாடா நிறுவனங்கள் தற்போது முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட்டாக மாறியுள்ளது.
அதிலும் முக்கியமாக டாடா கெமிக்கல்ஸ் தான் தற்போது அனைவரின் இலக்காக மாறியுள்ளது. டாடா சன்ஸ் டிஸ்கவுன்ட்-க்கு பின்பு சுமார் 9-12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பட்டியலிடப்படும் வேளையில் 7 டாடா நிறுவனங்களிடம் சுமார் 11.92 சதவீத டாடா சன்ஸ் பங்குகள் உள்ளது. இதில் அதிகமாக டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் 2.5 சதவீட டாடா சன்ஸ் பங்குகள் உள்ளது.

இதுநாள் வரையில் டாடா சன்ஸ் பட்டியலிடப்படாத நிலையில் அதன் மதிப்பு டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் சேர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாடா கெமிக்கல்-ன் மொத்த சந்தை மதிப்பு 15,603 கோடி ரூபாயாக இருக்கும் வேளையில், டாடா சன்ஸ்-ன் 2.5 சதவீத பங்குகளின் மதிப்பு மட்டும் 17,407 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் டாடா கெமிக்கல்ஸ் சந்தை மதிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்பை பெற்றுள்தால் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான டார்கெட் ஆக மாறியுள்ளது.
2024ல் ஆர்பிஐ டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்ட போதும் டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் சுமார் 39 சதவீதம் உயர்த்த நிலையில், மீண்டும் இதேபோன்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. இதேபோல் டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டாடா இன்வெஸ்ட்மென்ட், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் என மொத்தம் 9 டாடா குழும நிறுவனங்கள் டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கிறது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் தடாலடியாக உயர்வதற்கான பத்து பொருத்தமும் பக்காவாக உள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.77 சதவீதம் உயர்ந்து 615 ரூபாய்க்கு வர்த்தகத்தை முடித்தது, இந்த ஆண்டு சுமார் 18.14 சதவீதம் சரிவில் வர்த்தகமாகி வரும் காரணத்தால் இந்த ஊக்கம் அதன் முதலீட்டாளர்களுக்கு சரிவில் இருந்து மீண்டு வர புதிய வாய்ப்பாக அமையும்.
ஆர்பிஐ விதிகளின் படி அப்பர் லேயர் நிதி நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும், இதன் படி டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதை தடுக்க டாடா நிர்வாகம் சார்பில் பல முயற்சிகள் எடுத்த நிலையில் பெரும் தோல்வியை சந்தித்து இருக்கும் வேளையில் மாற்று திட்டம் இல்லாமல் நிற்கிறது நோயல் டாடா தலைமையிலான டாடா குழுமம்.

