மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களும் இப்போது அக்குடும்பத்தின் மீட்பர்களாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடி, நேற்று (12) அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை அழைத்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் முன்னைய பகடைக்காய்கள்
பிரபாகரன் தனது கடவுள் என்று அவர் அறிவித்திருந்தார்.

இதற்கு முன்பு, கருணாவும் பிள்ளையானும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
பிரபாகரனைக் கடவுள் என்று பிரகடனம் செய்த அர்ச்சுன ராமநாதனும், மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு, இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கான சிறந்த சான்றை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

