Last Updated:
குழுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கம்.

