லண்டன் சில்வர் ஸ்டோன் மைதானத்தில் அஜித்குமார் பங்கேற்ற le mans கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்.
முன்னதாக, இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அஜித்தின் கார் மீது அமர்ந்து விஜய் போட்டோ எடுத்தார். பின், அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் முதல்-அமைச்சர் விஜய். இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுபற்றி அஜித் குமார் பேசுகையில், ”முதல்-அமைச்சர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்-அமைச்சரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
The post கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்..! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
