அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு, சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் பார்வையிட்டார்.
இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித் குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
மைதானத்துக்கு வருகை தந்த அஜித்தைக் கண்டதும் முதலமைச்சர் விஜய் ஓடிச் சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். விஜய் வருகைக்கு அஜித் தனது நன்றியைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான ‘மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண’ பந்தயத் தொடரின் 5ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 44 பந்தய கார்கள் பங்கேற்ற இந்தப் பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், பச்சைக் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு, சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் பார்வையிட்டார்.
சர்வதேசப் பந்தய வீரராகக் களமிறங்கிய நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பில் போட்டியிட்டார். அவர் 16ஆம் எண் கொண்ட அதிநவீன ‘Ligier’ பந்தயக் காரை இயக்கிய நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாகப் பங்கேற்றார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் அஜித் குமாரின் அணி மூன்றாம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதேவேளை, நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் நடிகை திரிஷா பந்தயத் தளத்துக்கு நேரில் வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்யுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து, பந்தயத்தைக் கண்டு ரசித்தார்.


