Last Updated:
இந்தக் கன்று 2026 செப்டம்பர் 11 அன்று பிறந்தது. பத்ரி இனக் கால்நடைகள் உத்தராகண்டின் ஒரு முக்கியமான உள்நாட்டு கால்நடை மரபணு வளமாகும். அவை உத்தராகண்டின் மாநில விலங்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாத்தல், பெருக்குதல், மரபணு மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, உத்தராகண்ட் மாநிலத்தில், சாஹிவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பசுவின் கருப்பையில் பத்ரி இனக் கருவைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சோதனைக்குழாய் கருத்தரித்தல் (ஓபியு – ஐவிஎஃப் – OPU-IVF) தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியமான பத்ரி இனப் பெண் கன்று ஒன்று வெற்றிகரமாகப் பிறந்துள்ளது.


