இதன்படி, தவிர்க்க முடியாத சிறப்பு காரணங்களுக்காக வங்கி அதிகாரிகளை அழைக்க நேர்ந்தால், அதற்கான காரணத்தை நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி அதிகாரிகளின் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, கிளைகளில் வாடிக்கையாளர் சேவை தடையின்றி நடைபெறும். சுருக்கமாகக் கூறின், காகிதமில்லா வங்கிச் சேவையை நோக்கி நாட்டை நகர்த்துவதோடு, பொதுமக்களின் அலைச்சலையும், நேர விரயத்தையும் இப்புதிய சட்டம் வெகுவாகக் குறைக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

