மிக்ச் (MiG) போர் விமானங்களின் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) பல மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
விசாரணை அதிகாரிகளின் அழைப்புக்கு இணங்க, விசாரணைகளுக்கு உதவுவதற்காக ராஜபக்ச காலை வேளையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வந்திருந்தார்.
இலங்கை விமானப் படைக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட மிக் போர் விமானங்கள் மற்றும் அது தொடர்பான நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.


