• Login
Saturday, September 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்தடுத்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள்.. மாஸ் காட்டும் வடகொரியா! அமெரிக்கா ஷாக் | North Korea fires multiple ballistic missiles after US-South Korea-Japan drills; US monitors closely

GenevaTimes by GenevaTimes
September 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள்.. மாஸ் காட்டும் வடகொரியா! அமெரிக்கா ஷாக் | North Korea fires multiple ballistic missiles after US-South Korea-Japan drills; US monitors closely
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Saturday, September 12, 2026, 10:43 [IST]

பியாங்யாங்: வடகொரியாவிற்கு மிக அருகில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரிய ராணுவ படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்ட நிலையில், தற்போது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை வடகொரியாவின் வொன்சான் பகுதியில் வடகொரியா பல ஏவுகணைகளை வீசி சோதனை செய்திருக்கிறது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 5 நாட்கள் நடத்திய ‘Freedom Edge’ என்கிற முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியை நேற்றுதான் நிறைவு செய்தன.

North Korea

இந்த பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, வடகொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிம் சாங் கி, கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் வடகொரியா தனது அதிகாரத்தின் பலத்திலிருந்து மிக கடுமையான மற்றும் எதிர்வினை ஆற்றக்கூடிய எதிரெதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த ஏவுகணை சோதனை நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவ பயிற்சி, அதற்கு எதிர்வினையாக வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பார்க்கும்போது, ரெண்டு பேரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டே.. பதற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றுதான் நமக்கு தோன்றும்.

வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அது திடீர் திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை செய்கிறது. எனவேதான் நாங்கள் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்கிறோம் என்று அமெரிக்கா சொல்வதை கேட்கும்போது.. நியாமான பாயிண்ட் என்று நினைப்போம். ஆனால், உண்மை வேறு!

கடந்த 1955ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இந்த கூட்டு பயிற்சியை நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு பக்கத்தில்.. இலங்கையுடன் சேர்ந்துக்கொண்டு சீனா கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கினால் நாம் சும்மா இருப்போமா? இந்திய பெருங்கடலில் ராணுவ பயிற்சி என்பது.. இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்! அதுபோலதான், கொரிய கடலில் அமெரிக்கா செய்யும் பயிற்சியும் வடகொரியாவுக்கு நேரடி அச்சுறுத்தல். இருந்தாலும், 2006ம் ஆண்டுதான் வடகொரியா அணு ஆயுத சோதனையை செய்தது.

50 ஆண்டுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தலை பொறுத்துக்கொண்டு, மிக சமீபத்தில்தான் வடகொரியா அணு ஆயுத சோதனையை செய்கிறது. ஆனால், இந்த சோதனையை காரணம் காட்டி.. மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா ராணுவ பயிற்சியை செய்வது என்பது சரிகிடையாது என்றே பலரும் கூறுகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் ராணுவ பயிற்சிக்கு எதிராக, வடகொரியா நடத்தியிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் கவனம் பெற்றிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி வடகொரியாவிடம் 120 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. மட்டுமல்லாது பல ஆயிரம் கி.மீக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவின் நிலப்பரப்பை துல்லியமாக தாக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளும் வடகொரியாவிடம் இருக்கின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

North Korea: Amidst joint military exercises conducted by the US, Japan, and South Korea in close proximity to North Korea, the latter has now test-fired intercontinental ballistic missiles. This has led to heightened tensions on the Korean Peninsula.

Read More

Previous Post

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு

Next Post

தோனி CSK வீரர் மட்டும்னு நினைச்சீங்களா? அவருக்கு இன்னோர் முகமும் இருக்கு..!! | MS Dhoni Isn’t Just a CSK Player—He’s a Minority Owner With Over 1 Lakh Shares; CSK CEO Denies “Big Stake” Rumours

Next Post
தோனி CSK வீரர் மட்டும்னு நினைச்சீங்களா? அவருக்கு இன்னோர் முகமும் இருக்கு..!! | MS Dhoni Isn’t Just a CSK Player—He’s a Minority Owner With Over 1 Lakh Shares; CSK CEO Denies “Big Stake” Rumours

தோனி CSK வீரர் மட்டும்னு நினைச்சீங்களா? அவருக்கு இன்னோர் முகமும் இருக்கு..!! | MS Dhoni Isn’t Just a CSK Player—He’s a Minority Owner With Over 1 Lakh Shares; CSK CEO Denies “Big Stake” Rumours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin