• Login
Saturday, September 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.10,000 சரிவு: சட்டென சரிந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று ஒரு கிராம் விலை என்ன? | Gold Prices Drop Sharply in Chennai, Coimbatore & Madurai Today: 22K Falls to ₹14,015/g, Silver Slides After 8 Days

GenevaTimes by GenevaTimes
September 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.10,000 சரிவு: சட்டென சரிந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று ஒரு கிராம் விலை என்ன? | Gold Prices Drop Sharply in Chennai, Coimbatore & Madurai Today: 22K Falls to ₹14,015/g, Silver Slides After 8 Days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.10,000 சரிவு: சட்டென சரிந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று ஒரு கிராம் விலை என்ன?

சென்னையில் நேற்று விலை உயர்ந்த தங்கம் இன்று சர்ரென சரிந்து இருக்கிறது. இந்த வாரத்தில் 5 நாட்களில் தங்கம் விலை ஒரு நாள் விலை உயர்வது அடுத்த நாள் சரிவது என ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை , மதுரை நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 240 ரூபாய் விலை குறைந்து 14,015 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 1920 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ரூ.10,000 சரிவு: சட்டென சரிந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று ஒரு கிராம் விலை என்ன?

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள் கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது ஒரு கிராம் 14,130 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பின் செவ்வாய்க்கிழமை விலை உயர்வு புதன் கிழமை விலை சரிவு , வியாழன்று விலை உயர்வு என இருந்த தங்கம் இன்று விலை குறைந்து ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 262 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,289 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,890 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கமாகவே இருக்கிறது. விலை குறைந்துவிட்டது பரவாயில்லை என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் அடுத்த நாளே விலை கூடிவிடுகிறது. ஈரான் போர் தான் இதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் மீண்டும் 100 டாலர்களை கடந்துவிட்டது. இதனல் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து கச்சா எண்ணெய், டாலர் வர்த்தகத்திற்கு சென்றுள்ளனர். இதனால் தங்கம் விலை குறைந்துள்ளது. ஈரான் போரின் போக்கு , கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் , மத்திய வங்கிகளின் வட்டி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கம் விலையில் இனி வரும் நாட்களில் மாற்றம் ஏற்படும். ஈரான் போர் தீவிரமடைந்தால் தங்கம் விலை குறையும், நிலைமை சீரானால் தங்கம் விலை உயரும்.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிட்டதட்ட 8 நாட்களாக விலை மாறாமல் இருந்த வெள்ளி இன்று தடாலடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை குறைந்து 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. கடந்த 3ஆம் தேதியில் இருந்து வெள்ளியின் விலை மாறாமல் இருந்து இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஆறுதல் தந்திருக்கிறது.

உலக சந்தையிலும் இன்று தங்கம் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் 4,333 டாலருக்கு வர்த்தகமாகிறது, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 63 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை உயர்ந்து 1,51,660 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Prices Drop Sharply in Chennai, Coimbatore & Madurai Today: 22K Falls to ₹14,015/g, Silver Slides After 8 Days

ரூ.10,000 சரிவு: சட்டென சரிந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று ஒரு கிராம் விலை என்ன? / Gold rates fell across Tamil Nadu on September 11, 2026, with 22K jewellery gold down ₹240/g to ₹14,015 and 24K pure gold down ₹262/g to ₹15,289, while silver dropped ₹10/g to ₹245 after a week of steady prices.

Story first published: Friday, September 11, 2026, 10:30 [IST]

Other articles published on Sep 11, 2026

Read More

Previous Post

கைக்குண்டு வைத்திருந்த வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை!

Next Post

நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், செயல்பாட்டு மையத்திற்குள் செல்ல அனுமதி கோருகின்றனர் – Malaysiakini

Next Post

நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், செயல்பாட்டு மையத்திற்குள் செல்ல அனுமதி கோருகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin