• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TCS நிறுவனத்தில் இந்த ‘ஏஐ ஏஜெண்ட்’ வந்தால் 75% ஊழியர்கள் பணிநீக்கம்? பீதியை கிளப்பும் OpenAI..! | OpenAI’s AI Agents Signal Massive Workforce Shift 3.1x Productivity Boost; Big Trouble for IT Leaders Like TCS, infosys

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TCS நிறுவனத்தில் இந்த ‘ஏஐ ஏஜெண்ட்’ வந்தால் 75% ஊழியர்கள் பணிநீக்கம்? பீதியை கிளப்பும் OpenAI..! | OpenAI’s AI Agents Signal Massive Workforce Shift 3.1x Productivity Boost; Big Trouble for IT Leaders Like TCS, infosys
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TCS நிறுவனத்தில் இந்த ‘ஏஐ ஏஜெண்ட்’ வந்தால் 75% ஊழியர்கள் பணிநீக்கம்? பீதியை கிளப்பும் OpenAI..!

உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பெரும்பாலான பணிகள் ஆட்டோமேஷன் செய்யப்படும், இதனால் மக்களின் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழக்க கூடும் என்ற அச்சம் தொடர்ந்து எழுந்து வருகிறது, ஆனால் இந்த மாற்றம் நடக்க குறைந்தது 10-15 வருடம் ஆகும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.

இதை மொத்தமாக உடைக்கும் அளவுக்கு ஓப்பன்ஏஐ ஒரு தகவல் வெளியிட்டு உள்ளது. OpenAI நிறுவனத்தில் தற்போது ஒரு மனித ஊழியர் செய்யும் 1 நாள் வேலைக்கு இணையாக, AI Agent-கள் 3.1 நாட்களுக்கு இணையான வேலையை செய்து கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளது.

TCS நிறுவனத்தில் இந்த 'ஏஐ ஏஜெண்ட்' வந்தால் 75% ஊழியர்கள் பணிநீக்கம்? பீதியை கிளப்பும் OpenAI..!

அதாவது ஒரு ஊழியர் 1 நாளில் 8 மணி நேரம் வேலை செய்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அதே அளவிலான வேலைகளை AI Agent-கள் 3.1 நாட்களுக்கு இணையான வேலையை இதே 8 மணிநேரத்தில் செய்து கொண்டு இருப்பதாக ஓப்பன்ஏஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆட்டோமேஷன் அளவீட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக டெக் துறையில் விவாதம் கிளம்பியுள்ளது.

இந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்றால், ‘உதாரணமாக’ டிசிஎஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். ஜூன் 30ஆம் தேதி தரவுகள் படி டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் 593,798 ஊழியர்கள் இணைந்து செய்தும் பணிகளை வெறும் 144,829 மனித ஊழியர்கள் கொண்டு செய்ய முடியும். அதாவது வெறும் 24.4 சதவீத ஊழியர்கள் போது, மற்றவர்களை அதாவது 75.6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிடலாம்.

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு பதிலாக 448,969 ஏஐ ஏஜெண்ட்கள் நிறுவ வேண்டும். இந்த 144,829 மனித ஊழியர்களில் நாம் இருக்கிறோமா என்பது தான் பீதியை கிளப்பும் கேள்வியாக உள்ளது.

OpenAI தற்போது வெறும் 4500 முதல் 7850 ஊழியர்களை கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2022ல் வெறும் 375 பேர் மட்டுமே பணியாற்றிய நிறுவனம் இது.

AI Agent என்பது தற்போது பெரும்பாலான மக்கள் ஒரு கேள்விக்கு கேட்டு அதற்கு பதில் சொல்லும் chatbot போன்ற விஷயம் இல்லை. இந்த ஏஐ ஏஜெண்ட்கள் ஒரு பணியை செய்ய சொல்லி உத்தரவிட்டால் போது, இந்த பணிகளை செய்ய தேவையான அனைத்து தகவல்களை சேகரித்து, பல பணிகளை படிப்படியாக தானாக செய்து, செய்த வேலையை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்து இறுதியாக பணியை மொத்தமாக முடித்து அளிக்கும் AI அமைப்பாகும்.

இதன் உதவியால் தான் தற்போது ஏஐ நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய மாடல்களை மேம்படுத்தி வேகமாக புதிய வெர்ஷன்களை அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது பிரச்சனை என்னவென்றால் ஆட்டோமேஷன் உச்சத்தை மற்ற துறைகளில் எதிரொலிப்பதை காட்டிலும் ஓப்பன்ஏஐ நிறுவனத்திலேயே உருவாகியுள்ளது என்பது தான். இந்நிறுவனத்தில் அதிகரித்து வரும் அடித்தடுத்த பணிகளை ஏஐ ஏஜெண்ட்கள் மூலம் செய்து அதை மனித ஊழியர்கள் வெறுமனே மேற்பார்வை மட்டுமே செய்கின்றனர்.

இத்தகைய வேகத்தில் உலகின் அனைத்து துறையிலும், அனைத்து பணிகளிலும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டால் மனித ஊழியர்களுக்கான தேவை என்பது வேகமாக குறையும்.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் automation threshold குறித்து வெளியான அறிக்கையில், தற்போது நாங்கள் இன்பரா பிரச்சனைகளை கூட ஏஐ ஏஜெண்ட்கள் மூலம் சரி செய்கிறோம், முன்பெல்லாம் இதற்கு தனி நுபுணத்துவம் பெற்ற நபர்கள் தேவைப்பட்டனர்.

ஆனால் இப்போது இதற்கான அவசியம் இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதேவேளையில் மனித ஊழியர்கள் தற்போது ஆராய்ச்சி, இன்னோவேஷன் பிரிவுகளில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான பணி செய்வது ஏஐ ஏஐெண்ட்களுக்காக உள்ளனர். இதேபோல் ஏஐ ஏஜெண்ட் செய்த பணிகளை ஆய்வு செய்யவும் மனித ஊழியர்களை நியமித்து உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Share This Article

English summary

OpenAI’s AI Agents Signal Massive Workforce Shift 3.1x Productivity Boost; Big Trouble for IT Leaders Like TCS, infosys

OpenAI’s AI Agents Signal Massive Workforce Shift 3.1x Productivity Boost; Big Trouble for IT Leaders Like TCS, infosys — TCS நிறுவனத்தில் இந்த ‘ஏஐ ஏஜெண்ட்’ வந்தால் 75% ஊழியர்கள் பணிநீக்கம்? பீதியை கிளப்பும் OpenAI..!

Story first published: Friday, September 11, 2026, 13:35 [IST]

Other articles published on Sep 11, 2026

Read More

Previous Post

சிஎஸ்கே அணியின் கிங்காக மாறிய தோனி.. பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்ற தல.. என்ன நடக்குது? | CSK to Finalize New Coach After MS Dhoni Returns From US; Foreign Names Excluded From Consideration

Next Post

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் வெற்றிகளால், அம்னோ கட்சி அரசியல் இலக்காக மாறியுள்ளது – அம்னோ பிரதிநிதி – Malaysiakini

Next Post

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் வெற்றிகளால், அம்னோ கட்சி அரசியல் இலக்காக மாறியுள்ளது – அம்னோ பிரதிநிதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin