• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹோட்டல் பில்லில் இருக்கும் GST உண்மையானது தானா? வெறும் 1 நிமிடத்தில் சரி பார்க்கலாம்! | How to check GST on your restaurant bill within 1 minute that Help You Avoid Paying Extra

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹோட்டல் பில்லில் இருக்கும் GST உண்மையானது தானா? வெறும் 1 நிமிடத்தில் சரி பார்க்கலாம்! | How to check GST on your restaurant bill within 1 minute that Help You Avoid Paying Extra
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோட்டல் பில்லில் இருக்கும் GST உண்மையானது தானா? வெறும் 1 நிமிடத்தில் சரி பார்க்கலாம்!

ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தவுடன் அங்கு கொடுக்கப்படும் பில்லில் ஜிஎஸ்டி தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதையும் சேர்த்து தான் பில் செலுத்த வேண்டும். பலர் உண்மையிலேயே அந்த ஹோட்டல் உரிமையாளர் அரசுக்கு வரி செலுத்துகிறாரா? என்பதை கவனிக்காமல் பில்லில் கொடுக்கப்பட்டிருக்கும் சாப்பாட்டுக்கான தொகையையும், வரியையும் சேர்த்து செலுத்தி விடுவார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக ஹோட்டல் உரிமையாளர் வசூலிக்கும் வரி உண்மையானதுதானா? என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டு பிறகு செலுத்தலாம்.

இதை எப்படி செய்வது என்பதை ஒரு சார்ட்டட் அக்கவுண்டன் தன்னுடைய X பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதீக் பர்தா என்ற நபர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவர் சாப்பிட்ட உணவுக்கு ரூ.641.90 பில் வந்துள்ளது. இதற்கு ஹோட்டல் உரிமையாளர் 2.5% CGST மற்றும் 2.5 சதவீத SGST சேர்த்து ஜிஎஸ்டி தொகையாக 32.10 ரூபாய் போட்டிருந்தார்.

ஹோட்டல் பில்லில் இருக்கும் GST உண்மையானது தானா? வெறும் 1 நிமிடத்தில் சரி பார்க்கலாம்!

ஆனால் பிரதீக் உடனடியாக பில் தொகையை செலுத்தவில்லை. தான் ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் என்பதால் ஹோட்டல் ஓனர் அரசுக்கு வரி செலுத்துகிறாரா என்பதை சரி பார்த்துள்ளார்.

ஒரு உணவகம் காம்போசிஷன் டேக்ஸ் பிரிவில் வந்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களிடம் எந்த வரியும் வசூலிக்க கூடாது. எனவே இவர் நார்மல் டேக்ஸ் பேயரா? காம்போசிஷன் டேக்ஸ் பெயரா? என்பதை பார்த்திருக்கிறார்.

அதற்கு முதலில் வருமான வரித்துறையின் “https://gst.gov.in” என்ற இணையதளத்திற்கு சென்று பில்லில் இருந்த GSTIN நம்பரை வழங்கி சர்ச் செய்துள்ளார். அப்போது அதில் ரெகுலர் டாக்ஸ் பெயர் என்று காண்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகே அவர் பில் செலுத்தி இருக்கிறார்.

ஆனால் பல வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பணம் செலுத்துவதற்கு முன்னர் அந்த நபர் வரி செலுத்துபவரா என்பதை கவனிக்காமல் செலுத்தி விடுகின்றனர். காம்போசிஷன் டேக்ஸ் பேயராக இருந்தால் அந்த ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி வசூலிக்க கூடாது.

காம்போசிஷன் பிரிவின் கீழ் வரும் உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த பணத்திலிருந்து தான் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வணிகர்களாக இருந்தால் 1 சதவீதமும், சேவை வழங்குனர்களாக இருந்தால் 6 சதவீதமும் செலுத்த வேண்டும். எனவே வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் பில்லில் ஜிஎஸ்டியை சேர்க்கக்கூடாது. இதைத்தான் அந்த நபர் தன்னுடைய X பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சரிபார்ப்பு செயல்முறைக்கு அவ்வளவு நேரம் எடுக்காது. வெறும் 1 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். இப்படி செய்வதால் நாம் செலுத்தும் பணம் அரசுக்கு செல்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ள முடியும். சில உரிமையாளர்கள் வேண்டுமென்றே இது போன்ற கட்டணங்களை விதிக்கின்றனர். ஆனால் அவர்கள் போடும் ஜிஎஸ்டி கண்டிப்பாக அரசை சென்றடையாது. நீங்கள் செலுத்தும் பணமும் வீணாக அந்த உரிமையாளருக்கே போகும். எனவே மறுமுறை ஹோட்டலுக்கு செல்லும்போது இந்த சரிபார்ப்பை செய்துவிட்டு பிறகு ஜிஎஸ்டி செலுத்துங்கள்.

Share This Article

Story first published: Friday, September 11, 2026, 14:57 [IST]

Other articles published on Sep 11, 2026

Read More

Previous Post

டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது

Next Post

கேமரன் ஹைலேண்ட்ஸில் மலையேற்றத்தின் போது ஜெர்மனி நாட்டு சுற்றுலாப் பயணி மரணம்

Next Post

கேமரன் ஹைலேண்ட்ஸில் மலையேற்றத்தின் போது ஜெர்மனி நாட்டு சுற்றுலாப் பயணி மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin