இந்தாண்டில், ஆகஸ்ட் மாதம் வரை 21,406 எக்டர் நெல் சாகுபடி, 8,866 எக்டர் சிறுதானிய பயிர், 1233 எக்டர் பயறு வகைகள், 14,117 எக்டர் எண்ணெய் வித்து,10,253 எக்டர் கரும்பு சாகுபடி, என 55,876 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய மழையின்மையால், நடப்பு சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாக, குறுகிய கால மற்றும் இடைக்கால நெல் ரகங்கள், கம்பு, திணை, உளுந்து, மணிலா போன்ற குறுகிய கால தானிய பயிர்களை சாகுபடி செய்ய வேளாண் துறையினர் அறிவுரை.

