தினமும் ரூ.172 சேமிப்பு… ஒருவர் ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை (sum assured) மற்றும் 25 ஆண்டுகள் கால அளவு கொண்ட ‘எல்ஐசி ஜீவன் லட்சுமி’ (LIC Jeevan Lakshmi) பாலிசியைத் தேர்ந்தெடுத்தால், அவர் 22 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். எல்ஐசி-யின் கணக்கீட்டின்படி, பாலிசிதாரர் மாதத்திற்கு ரூ.5,169-ஐ, அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.172-ஐ பிரீமியமாகச் செலுத்த வேண்டும். இந்தப் பிரீமியத்தின் மீது முதல் ஆண்டில் 4.5 சதவீதமும், இரண்டாவது ஆண்டிலிருந்து 2.25 சதவீதமும் ஜிஎஸ்டி (GST) விதிக்கப்படும்.


