• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இங்கே மனிதர்களுக்கு வேலை இல்லை.. முழுக்க முழுக்க AIஇல் இயங்கும் TCS அலுவலகம்..!! அது என்ன Lights-Out Factory? | TCS Opens India’s First ‘Lights-Out’ AI Factory Lab in Pune — No Humans, Only Robots and Digital Twins

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இங்கே மனிதர்களுக்கு வேலை இல்லை.. முழுக்க முழுக்க AIஇல் இயங்கும் TCS அலுவலகம்..!! அது என்ன Lights-Out Factory? | TCS Opens India’s First ‘Lights-Out’ AI Factory Lab in Pune — No Humans, Only Robots and Digital Twins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இங்கே மனிதர்களுக்கு வேலை இல்லை.. முழுக்க முழுக்க AIஇல் இயங்கும் TCS அலுவலகம்..!! அது என்ன Lights-Out Factory?

ஐடி, ஹெச்.ஆர் போன்ற வெள்ளை காலர் வேலைகளுக்கு தான் ஏஐ ஆப்பு வைக்கிறது என்றால் இனி தொழிற்சாலை வேலைகளும் கூட ஏஐ வசம் சென்று விடும் போல இருக்கிறது. இதற்கான ஒரு மாடல் ஆலையை டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அமைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனது முதல் ‘லைட்ஸ்-அவுட்’ தொழிற்சாலை ஆய்வகத்தை (Lights-Out Factory Lab) தொடங்கியுள்ளது. மனிதர்களே இல்லாத முழுக்க முழுக்க ஏஐ மற்றும் ரோபோக்களை கொண்டு இயங்கும் ஆய்வகம் இது என்பது தான் இதன் சிறப்பே.

இங்கே மனிதர்களுக்கு வேலை இல்லை.. முழுக்க முழுக்க AIஇல் இயங்கும் TCS அலுவலகம்..!! அது என்ன Lights-Out Factory?

புனேவில் உள்ள சியாத்ரி பூங்கா வளாகத்தில் இந்தியாவின் முதல் லைட்ஸ்-அவுட் தொழிற்சாலை ஆய்வகத்தை டிசிஎஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. Lights-Out Factory என்பது மனிதர்களின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் தொழிற்சாலை அமைப்பாகும். இங்கு ரோபோக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும். அதாவது விளக்குகள் அணைக்கப்பட்டாலும் இயந்திரங்கள் இயங்கி கொண்டே இருக்கும் என்பதால் இதனை இப்படி அழைக்கின்றனர்.

இந்த புதிய ஆய்வகத்தை டிசிஎஸ் நிறுவனம் Digital Twins என அழைக்கிறது. அதாவது தொழில்துறை செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், தொழிற்சாலை கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் நிகழ்நேர செயல்பாட்டு நுண்ணறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து இது செயல்படுகிறது.

இந்த ஆய்வகத்தின் மையப் பகுதியாக, பல கட்டங்களை கொண்ட முற்றிலும் ரோபோக்களால் இயக்கப்படும் Battery Pack Assembly Line அமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களது தொழிற்சாலைகளில் புதிய ஏஐ முறைகளை அறிமுகப்படுத்தும் முன், இந்த கட்டுப்பாடான சூழலில் அவற்றை சோதித்து பார்த்து, அதில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்கலாம் என்கிறது டிசிஎஸ்.

இந்த ஆய்வகம் இயந்திரங்களில் பழுது ஏற்படுவதை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை தரும். பொருட்களின் தரத்தை மனிதர்களின் துணையின்றி துல்லியமாக சரிபார்க்கும். சரிபார்ப்பது. உற்பத்தியின் வேகத்தை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்தும். 24 மணி நேரமும் ஆலை அதன் முழு திறனுக்கு ஏற்ப தொடர்ந்து இயங்குவதை இது உறுதி செய்யுமாம். எத்தகைய தொழில் ஆலைகளுக்கு இது முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவரவில்லை ஆனால் படிப்படியாக நம் தொழிற்சாலைகள் இப்படி ஏஐ மற்றும் ரோபோக்களால் மாறுவது உறுதி.

டிசிஎஸ் நிறுவனத்தின் தொழில்துறை மற்றும் இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் சீனிவாச சக்ரவர்த்தி, எதிர்காலத்துக்கான தொழிற்சாலைகளை மறுவரையறை செய்து வருகிறோம். Human + AI என்ற மாடலில் நிறுவனங்களை டிஜிட்டல் செயல்பாடுகளிலிருந்து முழுமையான தன்னிச்சையான உற்பத்தி அமைப்புகளுக்கு எவ்வாறு நகர்த்தலாம் என்பதை இந்த ஆய்வகம் தெளிவாக காட்டுகிறது என கூறியுள்ளார்.

ஏற்கனவே பெங்களூரில் என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் உதவியோடு Physical AI பயன்பாடுகளுக்காக டிசிஎஸ் ஒரு ஆய்வகத்தைத் தொடங்கியிருந்த நிலையில், புனேவில் தொடங்கப்பட்டுள்ள இந்த லைட்ஸ்-அவுட் தொழிற்சாலை ஆய்வகம் இந்தியாவின் உற்பத்தி துறையை Industry 4.0 என்ற அடுத்து கட்டத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

TCS Opens India’s First ‘Lights-Out’ AI Factory Lab in Pune — No Humans, Only Robots and Digital Twins

இங்கே மனிதர்களுக்கு வேலை இல்லை.. முழுக்க முழுக்க AIஇல் இயங்கும் TCS அலுவலகம்..!! அது என்ன Lights-Out Factory?/ Tata Consultancy Services has launched India’s first “lights-out” factory lab at its Sahyadri Park campus in Pune, a fully automated facility where AI, robotics, digital twins and real-time operational intelligence run production with minimal human intervention.

Story first published: Friday, September 11, 2026, 14:09 [IST]

Other articles published on Sep 11, 2026

Read More

Previous Post

4.8 லட்சம் பணம் பரிசு… திமுகவை காப்பி அடித்த டிரம்ப்.. ஸ்ரீதர் வேம்பு கிண்டல் | A cash prize of $5,000 for every American: Sridhar Vembu quips that Trump copied the DMK

Next Post

பெருவெள்ளத்தால் பாதித்த நேபாளத்தில் மற்றொரு சோகம்… சமையல் எரிவாயு தட்டுப்பாடு! | World News (உலக செய்திகள்)

Next Post
பெருவெள்ளத்தால் பாதித்த நேபாளத்தில் மற்றொரு சோகம்… சமையல் எரிவாயு தட்டுப்பாடு! | World News (உலக செய்திகள்)

பெருவெள்ளத்தால் பாதித்த நேபாளத்தில் மற்றொரு சோகம்... சமையல் எரிவாயு தட்டுப்பாடு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin