
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும், மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

