12 ஆண்டுகளுக்குப் பின் கடகத்தில் இணையும் குரு-சந்திர சேர்க்கை: கஜகேசரி ராஜயோகத்தால் பெரும் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் எவை? முழு பலன்கள் இதோ.
ஜோதிட சாஸ்திரத்தில் மனோகாரகனாகவும், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் அதிபதியாகவும் சந்திரன் போற்றப்படுகிறார். நவகிரகங்களிலேயே மிகக் குறுகிய காலத்தில் அதாவது இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி வீட்டை மாற்றும் விரைவான நகர்வு கொண்டவர் சந்திரன். தனது சொந்த ஆட்சி வீடான கடக ராசிக்குள் சந்திரன் செப்டம்பர் 07 ஆம் திகதி பிரவேசித்துள்ளார்.
ஏற்கனவே அறிவு, ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் காரகரான குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் சஞ்சரித்து வருகிறார். இதன் காரணமாக சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடக ராசியில் குரு பகவானும் சந்திரனும் ஒன்றிணையும் மகா சேர்க்கை நிகழ்ந்துள்ளது. ஜோதிட ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததும் மங்களகரமானதுமான ‘கஜகேசரி ராஜயோகம்’ இந்த சேர்க்கையால் உருவாகி, செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கிறது. ராசி மண்டலத்தையே அதிரவைக்கும் இந்த அபூர்வ ராஜயோகத்தால் இரட்டிப்பு பலன்களையும் திடீர் பண மழையையும் அனுபவிக்கப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நீண்ட நாள் கனவான புதிய வீடு, நிலம், சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகளும் குழப்பங்களும் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத வழிகளில் பண வரவு அதிகரித்து நிதி நிலைமை அசுர வேகத்தில் உயரும்.
கடகம்
கடக ராசியின் ஜென்ம ராசியிலேயே குருவும் சந்திரனும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை ஏற்படுத்துகின்றனர். இதன் பலனாக சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் பல மடங்கு உயரும். சுபகாரியத் தடைகள் விலகி திருமணம் கைகூடாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். இல்லற வாழ்க்கை இன்பமயமாக மாறும். பணியிடத்தில் உங்களின் ஆளுமைத்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு புதிய பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த வேலைகள் யாவும் மின்னல் வேகத்தில் முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் கஜகேசரி யோகம் அமைவதால் அதிர்ஷ்டக் காற்று முழுமையாக வீசத் தொடங்கும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்குகளும் சிக்கலான வேலைகளும் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து திருத்தலப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த பயணங்கள் மூலம் இரட்டிப்பு லாபம் கிட்டும். கல்வி பயிலும் மாணவ மாணவியர் சிறந்த தேர்ச்சியையும் சாதனைகளையும் பெறுவர். புதிய வருமான வழிகள் திறக்கப்பட்டு பொருளாதார பலம் உயரும்.
மீனம்
மீன ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால் சந்ததிகள் வழியே மனமகிழும் சுபச் செய்திகள் வந்து சேரும். எழுத்து, கலை, ஊடகம் மற்றும் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு அபார வெற்றியும் சமூக அங்கீகாரமும் கிட்டும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் முந்தைய சேமிப்பு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத திடீர் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு புதிய தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளும் எளிதாகக் கிடைக்கும்.

