சேமிப்பு என்பது நமது இலக்குகளை அடைவதற்கும், அவசரகால தேவையை பூர்த்தி செய்யவும் போன்ற பல்வேறு விதமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அந்த வகையில் நம் பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதை காட்டிலும் நம்பகமான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதற்கான வட்டியையும் நம்மால் பெற முடியும்.
இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்வது ஃபிக்சட் டெபாசிட்கள். ஆனால் ஃபிக்சட் டெபாசிட்களை காட்டிலும் பாதுகாப்பான மற்றும் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை பெற்றுத் தரும் இன்னும் பல்வேறு விதமான சிறுசேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அப்படி உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில சிறு சேமிப்பு திட்டங்கள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
தபால் நிலைய சேமிப்பு கணக்கு:
தபால் நிலைய சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு உங்களிடம் குறைந்தபட்சமாக 500 ரூபாய் இருந்தால் போதும். மேலும் இதில் குறைந்தபட்ச வித்ட்ராயல் தொகை 50 ரூபாய் ஆகும். இந்த கணக்கில் டெபாசிட் செய்வதற்கு அதிகபட்ச தொகை வரம்பு எதுவும் கிடையாது.
டைம் டெபாசிட் (1,2,3,5 வருடங்கள்):
இந்த தபால் நிலைய டெபாசிட் அக்கவுண்டின் குறைந்தபட்ச பேலன்ஸ் 1000 ரூபாய் ஆகும். இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச லிமிட் எதுவும் நியமிக்கப்படவில்லை. ஒருவேளை நீங்கள் 5-வருட டேர்ம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
5-வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:
இதற்கான குறைந்தபட்ச பேலன்ஸ் ஒரு மாதத்திற்கு 100 ரூபாய் மற்றும் அதிகபட்ச லிமிட் கிடையாது. அடுத்தடுத்த டெபாசிட்களை நீங்கள் ஒரு மாதத்தின் 15 வது நாளிலோ அல்லது குறிப்பிட்ட அந்த மாதத்தின் கடைசி வேலை நாளிலோ டெபாசிட் செய்யலாம்.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்:
இந்த திட்டத்திற்கான குறைத்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகவும், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயையும் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிற்கு வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் வரிப் பலன்கள் உண்டு.
மாத வருமான கணக்கு:
இந்த மாத முதலீட்டு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச லிமிட் தனிநபர் கணக்கிற்கு 9 லட்சம் ரூபாயாகவும், ஜாயிண்ட் அக்கவுண்ட்டிற்கு 15 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC):
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய உங்களிடம் குறைத்தபட்சமாக 1000 ரூபாய் இருக்க வேண்டும். மேலும் இதில் அதிகபட்ச லிமிட் எதுவும் கிடையாது.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF):
PPF அக்கவுண்ட் திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை 1.5 லட்சம் ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் பெரிய அளவிலான தொகையை ஒரே சமயத்திலோ அல்லது இன்ஸ்டால்மெண்ட் முறையிலோ டெபாசிட் செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்திரம்:
கிசான் விகாஸ் பத்திரம் முதலீட்டு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச லிமிட் கிடையாது.
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ்:
இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச லிமிட் 2 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரிதி சேமிப்பு திட்டம்:
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு குறிப்பிட்ட மாதம் அல்லது நிதி ஆண்டில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது பெரிய அளவிலான தொகையை ஒரே சமயத்திலும் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)