• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2050ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்..? ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? | Gold Price Prediction 2050: How Much Will ₹1 Lakh Invested in Gold Be Worth in 2050?

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2050ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்..? ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? | Gold Price Prediction 2050: How Much Will ₹1 Lakh Invested in Gold Be Worth in 2050?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2050ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்..? ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

தங்கம் தற்போது குடும்பங்களை தாண்டி உலக நாடுகளின் முக்கியமான முதலீட்டு ஆதாரமாக விளங்கி வருகிறது, தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ந்து தங்கத்தை நோக்கிதான் முதலீட்டு சந்தை நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் என்ற குறுகிய கால விலை மாற்றத்தை தாண்டி நீண்ட கால அடிப்படையில் ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமாயின் என்ன செய்யலாம்..? இன்று நாம் முதலீடு செய்யும் தங்கத்தின் மதிப்பு 2050ல் எவ்வளவு உயரும்..?

2050ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்..? ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 65 ரூபாய் குறைந்து 15,415 ரூபாயாக உள்ளது. 18 கேரட் தங்கம் எனில் 60 ரூபாய் குறைந்து 11,900 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை ஆகஸ்ட் மாதம் மட்டும் 8.41 சதவீதம் உயர்ந்தாலும், செப்டம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.32 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் இன்று 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2050ல் இதன் மதிப்பு என்னவாக இருக்கும்..?

முதலில் ஒரு சொத்து நீண்டகால அடிப்படையில் அதன் மதீப்பீட்டை தக்கவைக்கும் அளவுக்கான திறன் கொண்டு உள்ளதா என்பதன் அடிப்படையிலேயே அதன் மீது நீண்ட கால முதலீட்டை செய்ய முடியும்.

எப்போது ஒரு பொருளின் பயன்பாடு, சப்ளை, டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அதன் மதிப்பு உயரும் அல்லது குறையும். அந்த வகையில் தங்கத்திற்கான கனிம வளங்கள் புதிதாக கண்டுப்படிக்கப்படாத நிலையிலும், அதன் சுத்திகரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் வேளையும், தங்கத்திற்கான இருப்பு குறைந்து வரும் வேளையிலும் நீண்ட கால அடிப்படையில் சப்ளை பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

இதேபோல் தங்கம் நகைகளாக மட்டும் அல்லாமல் தொழிற்துறையிலும் அதிகளவில் பயன்படுத்தப்படும் காரணத்தால் டிமாண்ட் அளவுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது, இதேபோல் தொழிற்துறையில் தங்கத்திற்கான மாற்று உலோகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதனால் குறைவான சப்ளை அதிகப்படியான டிமாண்ட் என தங்கம் விலை உயர்வதற்கான சாத்தியக்கூர்கள் அதிகமாகவே உள்ளது. இதேபோல் உலக நாடுகள் தங்கத்தை முக்கிய மற்றும் பாதுகாப்பான சொத்தாக தொடர்ந்து நம்பும் காரணத்தால் அமெரிக்கா, பிரிட்டன், நாடுகளில் இருக்கும் தங்கத்தை தாய் நாட்டிற்கு கொண்டு வர துவங்கியுள்ளது.

அடுத்தாக அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் அதிகரித்து வரும் கடனை தங்கத்தின் விலை உயர்வு வாயிலாக பூர்த்தி செய்யும் திட்டத்தை கொண்டு உள்ளது. இதற்காக தங்களிடம் இருக்கும் உலோக தங்கத்தை டிஜிட்டல் டோக்கனாக மாற்ற அதை உலகம் முழுவதிலும் சிறிய தொகைக்கு வர்த்தகம் செய்யப்படுவது மூலம் தங்கத்தின் விலையை உயர்ந்தும் Tokenization முறை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அனைத்து மட்டத்திலும், அனைத்து பிரிவுகளிலும் இருப்பதை பொருளாதார வல்லுனர்கள் உறுதி செய்கின்றனர்.

இதேவேளையில் தங்கத்தின் மீதான முதலீட்டை இதன் முந்தைய கால செயல்பாட்டை கணக்கிடும் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம். 2020ல் அதாவது 6 வருடத்திற்கு முன்பு ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 50000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 1.5 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகி சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 30 வருடத்தில் பல ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் தங்கம் மீதான முதலீடு வருடத்திற்கு சராசரியாக 10.83 சதவீத CAGR அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே 20 வருட வரலாற்றை பார்க்கும் போது 14.35 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஆனால் கடந்த 15 வருடத்தில் CAGR அளவீடு ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்கத்தால் 12 சதவீதமாக மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே டாலர் மதிப்பீட்டில் தங்கம் விலை வருடத்திற்கு 5-7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது தற்போதைய சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4,403.38 டாலராக இருக்கும் வேளையில், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் இதர உலக நாடுகளின் தங்கம் நுகர்வு தொடரும் பட்சத்தில் 2030க்குள் தங்கம் விலை 10000 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக 2050ல் 15000 – 20000 டாலர் வரையில் உயரும் பல்வேறு முதலீட்டு ஆய்வாளர்களும், அமைப்புகளும் கணித்துள்ளது. இது தற்போதைய 4,403.38 டாலரை காட்டிலும் 5-6 மடங்கு.

அப்படியானால் இன்று தங்கத்தில் செய்யப்பட்டும் 1 லட்சம் ரூபாய் பணத்தை 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்தால்.. CAGR அடிப்படையில் வருடத்திற்கு 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்தாலும் 1 லட்சம் ரூபாய் முதலீடு 14-15 லட்சமாக உயரும், இதேபோல் 12 சதவீதமாக உயர்ந்தால் 22 லட்சமாக உயரும்.

Share This Article

English summary

Gold Price Prediction 2050: How Much Will ₹1 Lakh Invested in Gold Be Worth in 2050?

Gold Price Prediction 2050: How Much Will ₹1 Lakh Invested in Gold Be Worth in 2050? — 2050ல் தங்கத்தின் விலை என்ன..? புட்டு புட்டு வைக்கும் டேட்டா.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

Story first published: Monday, September 7, 2026, 15:58 [IST]

Read More

Previous Post

ஆப்பிள் லாஞ்சுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி.. சம்பவம் செய்த Huawei! மொத்த மொபைல் உலகமும் ஷாக்! | Huawei, Xiaomi launch new foldable phones days before Apple’s first foldable iPhone debut

Next Post

இணையத்தில் அதிகரித்த இனவெறிப் பேச்சு.. இந்தியர்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் | World News (உலக செய்திகள்)

Next Post
இணையத்தில் அதிகரித்த இனவெறிப் பேச்சு.. இந்தியர்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் | World News (உலக செய்திகள்)

இணையத்தில் அதிகரித்த இனவெறிப் பேச்சு.. இந்தியர்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin