• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? – Equal Earth Map Explained

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? – Equal Earth Map Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், ஓர் அரசியல் சூழ்ச்சி.

தற்போது, இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் மிக முக்கிய முன்னெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை கையில் எடுத்துள்ளது. ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் உண்மையான அளவை துல்லியமாகக் காட்டும் புதிய வரைபடத்தை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

`ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் பெரிதாகவும், ஆப்பிரிக்காவைப் பல மடங்கு சிறிதாகவும் காட்டிவந்த அந்த காலனித்துவ காலத்து வரைபடங்களுக்கு முடிவு கட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை ஒரு புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்திற்கு அதன் உண்மையான அளவையும், அங்கீகாரத்தையும் வழங்கும் இந்த புதிய வரைபடத் திருத்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, உலக அரங்கில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4, 2026) அன்று இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆப்பிரிக்க யூனியனின் முன்னெடுப்பில், டோகோ குடியரசு இந்த “வரைபடத்தைத் திருத்துங்கள்” (Correct the Map) என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது. “கண்டங்களின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிப்பதை” நோக்கமாகக் கொண்ட இந்த தீர்மானத்திற்கு, இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால், அமெரிக்கா மட்டும் இதற்கு எதிராக வாக்களித்தது; மேலும் ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த முடிவு, வெறும் வரைபட மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு அரசியல் மற்றும் பண்இந்த தீர்மானத்தை முன்மொழிந்த டோகோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராபர்ட் டஸ்ஸிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஐ.நா

நாம் பள்ளிகளிலும், இணையத்திலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பார்க்கும் மெர்கேட்டர் (Mercator) வரைபடத்தில், ஆப்பிரிக்கக் கண்டமும், கிரீன்லாந்தும் கிட்டத்தட்ட ஒரே அளவில் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்தை விட சுமார் 14 மடங்கு பெரியது! இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை மறைத்து, ஆப்பிரிக்காவின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் இந்த வரைபட முறைக்கு எதிராகவே ஐ.நா. போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

‘வரைபடத்தைச் சரி செய்யுங்கள்’ என்ற இந்தத் தீர்மானத்தின் மூலம், ‘ஈகுவல் எர்த்’ (Equal Earth) என்ற புதிய வரைபடத்தை ஐ.நா. அங்கீகரித்துள்ளது.

மெர்கேட்டர் வரைபடத்தின் அரசியல் என்ன?

1569-ல் பிளெமிஷ் வரைபடக் கலைஞர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடத்தின் முக்கிய நோக்கம், ஐரோப்பிய மாலுமிகள் கடலில் எளிதாகப் பயணிக்க உதவுவதே. “ஒரு திசைகாட்டியைப் பின்பற்றிச் செல்லும்போது, வரைபடத்தில் ஒரு நேர்க்கோடு என்பது நிஜத்திலும் ஒரு நேர்க்கோடாக இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதை இந்த வரைபடம் கச்சிதமாகச் செய்தது,” என்கிறார் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் செஷயர்.

ஆனால், கோள வடிவ பூமியை ஒரு தட்டையான செவ்வகத்தில் வரையும்போது, இந்த நேர்க்கோடுகளைச் சாத்தியமாக்க மெர்கேட்டர் ஒரு சமரசத்தைச் செய்தார். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல, நாடுகளை நீட்டித்து, பெரிதாக்கிக் காட்டினார். இதன் விளைவாக, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகள் அவற்றின் உண்மையான அளவை விட மிகச் சிறியதாகவும், துருவங்களுக்கு அருகில் உள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா, ரஷ்யா போன்ற பகுதிகள் மிக மிகப் பெரியதாகவும் காட்சியளித்தன.

450 ஆண்டுகளுக்கும் மேலாக, கூகுள் மேப்ஸ் உட்பட நம் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் இந்த வரைபடம், ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரியதாகக் காட்டப்படும் நாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற எண்ணத்தை நம் ஆழ்மனதில் விதைக்கிறது.

கென்ய புவியியலாளர் கியோகோ முண்டோ இதுபற்றிக் கூறும்போது, “வரைபடங்கள் பயணிகளுக்கான வழிகாட்டிகள் மட்டுமல்ல; அவை பிராந்தியங்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதை வடிவமைக்கின்றன,” என்கிறார். ஆப்பிரிக்காவின் பரந்த வளங்கள், மக்கள் தொகை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் இந்த வரைபடத் திரிபுகளால் மறைமுகமாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்பதே அவரது ஆதங்கம்.

மாற்றாக வந்த வரைபடங்கள்

இந்த மெர்கேட்டர் சிக்கலைத் தீர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.நா. தற்போது ஏற்றுக்கொண்டுள்ள ‘ஈகுவல் எர்த்’ வரைபடம், 2018-ல் உருவாக்கப்பட்டது. இது நிலப்பரப்புகளின் அளவை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆப்பிரிக்க யூனியன் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வரைபடம், இப்போது உலக அரங்கிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உண்டு.

மாலுமிகளுக்குப் பயன்பட்ட நேர்க்கோட்டு வழிசெலுத்தல் இதில் சாத்தியமில்லை. “நீங்கள் பரப்பளவைச் சரியாகக் காட்டலாம், அல்லது வடிவத்தைச் சரியாகக் காட்டலாம், அல்லது தூரம் மற்றும் திசையைச் சரியாகக் காட்டலாம். ஆனால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கச்சிதமாகச் செய்ய முடியாது. அப்படிச் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் மீண்டும் கோள வடிவத்திற்குத்தான் செல்ல வேண்டும்,” என்கிறார் செஷயர்.

இதேபோல, 1970-களில் அர்னோ பீட்டர்ஸ் என்ற ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட ‘பீட்டர்ஸ் வரைபடம்’, அளவைத் துல்லியமாகக் காட்டியது. ஆனால், நாடுகளின் வடிவங்களை மிக மோசமாகச் சிதைத்தது. ஒரு வரைபடத்தில் வடக்கு மேலே இருக்க வேண்டும் என்ற விதியையே உடைத்து, தெற்கை மேலே காட்டும் வரைபடங்களும் உருவாக்கப்பட்டன. இது, ‘உலகளாவிய தெற்கு’ (Global South) தாழ்வானது என்ற உளவியல் தாக்கத்தை உடைக்கும் ஒரு முயற்சி. ஆனால், இவையெல்லாமே ஒரு சிக்கலைத் தீர்க்கப்போய் இன்னொரு சிக்கலை உருவாக்கும் தற்காலிகத் தீர்வுகளாகவே இருந்தன.

இறுதியாக, எந்தக் கண்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், வட துருவத்தை மையமாகக் கொண்டு உலகை வட்ட வடிவில் காட்டும் வரைபடங்களும் உள்ளன. ஐ.நா.வின் சின்னத்தில் இருப்பது இந்த வகை வரைபடம்தான். ஆனால் இதிலும், மையத்திலிருந்து விலகிச் செல்லச் செல்ல உருவங்கள் சிதைகின்றன.

ஆக, ஒரு தட்டையான வரைபடம் ஒருபோதும் முழுமையான இருக்க முடியாது. ஆனால், மெர்கேட்டரின் ஐரோப்பிய மையவாத, காலனித்துவப் பார்வையைக் கடந்து, உலகை அதன் உண்மையான பரிமாணங்களுடன் பார்க்கும் ஒரு முயற்சியாக ஐ.நா.வின் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. இது வெறும் வரைபடத்தை மாற்றுவதோடு மட்டும் முடிவதில்லை. அது உலகைப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை மாற்றும் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பு.!

Read More

Previous Post

SIP-ல் ரூ.3,000 முதலீடு; ரூ.2 கோடி சேமிக்க முடியுமா? எந்த வயதில் எவ்வளவு பணம் எஸ்ஐபி-ல் செலுத்த வேண்டும்?

Next Post

லங்காவி வாடகை அறையில் ஆண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Next Post
லங்காவி வாடகை அறையில் ஆண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

லங்காவி வாடகை அறையில் ஆண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin