Last Updated:
ஏற்கனவே வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்களில் மட்டுமே தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது – இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட உள்ளதாகவும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என இஸ்ரோ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரோவின் முக்கியத்துவம் குறைக்கப்படாது என்றும் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

