• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க கப்பலை துவம்சம் செய்த ஈரான்.. டிரம்ப் வெள்ளை கொடி தூக்கிய பின்பு நடக்கும் அட்டகாசம்! | Strait of Hormuz Escalation: Iran Strikes US Vessel and Drone as Tensions Flare

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க கப்பலை துவம்சம் செய்த ஈரான்.. டிரம்ப் வெள்ளை கொடி தூக்கிய பின்பு நடக்கும் அட்டகாசம்! | Strait of Hormuz Escalation: Iran Strikes US Vessel and Drone as Tensions Flare
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க கப்பலை துவம்சம் செய்த ஈரான்.. டிரம்ப் வெள்ளை கொடி தூக்கிய பின்பு நடக்கும் அட்டகாசம்!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் கடந்த வாரம் புதிய திருப்பத்தை எட்டிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக மீண்டும் பதற்றம் அதிகமாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹார்முஸ் வழித்தடத்தில் நுழைய முயன்ற ஒரு அமெரிக்க கப்பல் மீது ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கி முடக்கியுள்ளது.

இது இரு நாடுகள் மத்தியிலான போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது, மேலும் எப்போதும் பதிலடி மட்டுமே கொடுத்து வந்த ஈரான் கடந்த வாரம் முதல் முறையாக தாக்குதலை துவங்கியுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 அமெரிக்க கப்பலை துவம்சம் செய்த ஈரான்.. டிரம்ப் வெள்ளை கொடி தூக்கிய பின்பு நடக்கும் அட்டகாசம்!

இதேவேளையில் அமெரிக்க அதிபர் தலைமையிலான உயர்மட்ட குழு ஈரான் மீதான அமெரிக்காவின் போரை நிறுத்திக்கொண்டு பொருளாதார நெருக்கடி வாயிலாக முடக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய தாக்குதல் மீண்டும் போர் தாக்குதல் துவங்கம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் இன்றைய தாக்குதலை உறுதி செய்யாத அமெரிக்கா, நேற்றை ஈரானின் அமெரிக்க கடற்படை மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 3 ஈரானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

7 மாதங்களாக நடந்து வரும் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர், ஒரு மாத அமைதிக்குப் பிறகு கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலையும் அதிரடியாக உயர துவங்கின.

ஈரானின் நிதி ஆதாரத்தையும், வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த அமெரிக்கா ஒருபுறம் ராணுவ தாக்குதல்களையும், மறுபுறம் ஈரானுடன் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு உதவும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது தடைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

ஆனாலும் ஈரான் பல வழிகளில் தனது எரிபொருளையும் சந்தையில் விற்பனை செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. சில மணிநேரங்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவத்தின் டிரோனை குறிவைத்து தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.

மேலும் ஈரான் அமெரிக்கா இனி எந்தவொரு ராணுவ நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு கடுமையான பதிலடி இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும் IRGC கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஹார்முஸ் இனி தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று ராணுவ கப்பல், இன்று டிரோன், எண்ணெய் கப்பல் என ஈரான் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்த வருகிறது. இதனால் திங்கட்கிழமை அமெரிக்க பெரும் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Strait of Hormuz Escalation: Iran Strikes US Vessel and Drone as Tensions Flare

Strait of Hormuz Escalation: Iran Strikes US Vessel and Drone as Tensions Flare — அமெரிக்க கப்பலை துவம்சம் செய்த ஈரான்.. டிரம்ப் வெள்ளை கொடி தூக்கிய பின்பு நடக்கும் அட்டகாசம்!

Story first published: Sunday, September 6, 2026, 19:09 [IST]

Other articles published on Sep 6, 2026

Read More

Previous Post

“தனியார்மயம் ஆக்கப்படாது.. அப்படி ஒரு பிளானே இல்லை”.. இஸ்ரோ திட்டவட்டம்! | ISRO Rejects Privatisation Claims as “Baseless and Incorrect”

Next Post

BN அரசாங்கத்தைக் கவிழ்க்க சலுகை அளித்ததாக ஹாடியின் கூற்றை அமெரிக்கத் தூதரகம் மறுக்கிறது – Malaysiakini

Next Post

BN அரசாங்கத்தைக் கவிழ்க்க சலுகை அளித்ததாக ஹாடியின் கூற்றை அமெரிக்கத் தூதரகம் மறுக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin