சண்டீகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை அதிகாரியால் தாக்கப்பட்டதாக கங்கனா ரணாவத் விடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் கங்கனா ரணாவத், “வணக்கம் நண்பர்களே! ஊடகங்கள் மற்றும் எனது நலவிரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் இன்று நடந்த பாதுகாப்பு சோதனைக்கு பிறகு நான் புறப்பட்டபோது, சிஐஎஸ்எஃப் வீரர் என் முகத்தில் அடித்தார். ஏன் அவ்வாறு செய்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டங்களை அவர் ஆதரிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் எனது கவலை என்னவென்றால், பஞ்சாபில் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது?” என்று கூறியுள்ளார்.
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)