மலாக்கா:
மலாக்கா, செமாபோக் பகுதியில் உள்ள AMJ நெடுஞ்சாலையில் அதிகாலை வேளையில் ஏற்பட்ட விபத்தில் உணவு விநியோகிஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று (செப்டம்பர் 6) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் AMJ நெடுஞ்சாலையில் உள்ள செமாபோக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
யமஹா Y15ZR ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முகமட் ஹக்கீமின் ஏ. சமஹ் (வயது 24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்குத் தலை, உடல் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
காண்டாங் பகுதியிலிருந்து மலாக்கா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை நடுவில் உள்ள பிரிவில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மலாக்கா மத்திய மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி கமிஷனர் ஹலீம் அபாஸ் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆராய மலாக்கா மருத்துவமனை தடயவியல் துறையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41(1)-இன் கீழ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post AMJ நெடுஞ்சாலையில் மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உணவு விநியோகிஸ்தர் மரணம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

