கூச்சிங்:
பகாங், தெமெர்லோவில் மாணவி துஷ்பிரயோகம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் மோசமடைந்து வரும் புகைமூட்டம் காரணமாக பிந்துலு பிரிவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக் மாநிலம், பிந்துலு மற்றும் ததாவ்/செபாவு மாவட்டங்களில் உள்ள 54 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 9 நடுநிலைப் பள்ளிகள் (மொத்தம் 63 பள்ளிகள்) தற்காலிகமாக மூடப்படுகின்றன.
இந்த விடுமுறை நடவடிக்கையால் 22,476 தொடக்கப்பள்ளி மாணவர்களும், 17,268 இடைநிலைப் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் காற்று மாசு குறியீடு (API) ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பிந்துலுவின் API அளவு 206 ஆக பதிவானது.
செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 11 வரை இந்த பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். பள்ளி மூடப்பட்டிருக்கும் நாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு இணையம் வழி கற்பித்தல் மற்றும் கற்றல் வீட்டு வழி கற்றல் (PdPR) முறை அமல்படுத்தப்படும்.
சரவாக் கல்வித்துறை (JPNS), மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் மிகுந்த முன்னுரிமை வழங்குமாறும், நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) பின்பற்றுமாறும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டிய இந்த புகைமூட்டப் பிரச்சனை காரணமாக சரவாக் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பிந்துலுவில் மோசம் அடைந்த காற்று மாசுபாடு: செப்டம்பர் 11 வரை பள்ளிகள் மூடல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

