• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நள்ளிரவில் கார் விபத்து: 8 மாணவர்கள் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நள்ளிரவில் கார் விபத்து: 8 மாணவர்கள் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 6 இல் நிகழ்ந்துள்ளது.


தமிழகத்தின் மதுரை பதிவு எண் கொண்ட காரில் 8 பேர் பயணித்துள்ளனர். அந்தக் கார் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அதே திசையில் ஒரு லொறி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வீதி பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த லொறி மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்து பணம்பிக்குன்னு என்ற இடத்தில் நடந்துள்ளது.


இந்த விபத்தில்  காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். இருப்பினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.


விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரது கல்லூரி அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதில் அவர் திண்டுக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது. அதை வைத்து உயிரிழந்தவர்கள், மாணவர்களாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.


விபத்தில் சிக்கிய கார் முற்றிலுமாக சிதைந்த நிலையில், தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் மக்கள் என அனைவரும் இணைந்து கடுமையாக போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். (a)




Read More

Previous Post

தாய்மையின் வலியைப் பிரதிபலித்த உகாண்டா அழகியின் ஆடைக்கு ‘உலக டிசைனர் விருது’ … | Makkal Osai

Next Post

தெமெர்லோ பாலர் பள்ளியில் 2 வயது சிறுமிக்கு கொடுமை: வைரலான காணொளியால் போலிசார் விசாரணை! | Makkal Osai

Next Post
தெமெர்லோ பாலர் பள்ளியில் 2 வயது சிறுமிக்கு கொடுமை: வைரலான காணொளியால் போலிசார் விசாரணை! | Makkal Osai

தெமெர்லோ பாலர் பள்ளியில் 2 வயது சிறுமிக்கு கொடுமை: வைரலான காணொளியால் போலிசார் விசாரணை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin