தங்கம் விலையில் நடந்த அதிரடி மாற்றம்: வார இறுதி நாளில் நடந்த தரமான சம்பவம்..!!
வார இறுதிநாளான சனிக்கிழமையான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 170 ரூபாய் விலை சரிந்து 14,190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 1360 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,13,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 435 ரூபாய் விலை சரிந்தது. ஆனால் 3 மற்றும் 4 ஆகிய தேதி தங்கம் விலை 425 ரூபாய் விலை ஏறியது. இந்நிலையில் வார இறுதி நாளான சனிக்கிழமையான இன்று தங்கம் விலை 170 ரூபாய் விலை சரிந்துள்ளது. நாளை ஞாயிற்றுகிழமை தங்கம் விலை மாறாது என்பதால் தங்கம் வாஙக் வேண்டிய அவசியம் இருப்பவர்கள் இந்த வீக் எண்டில் வாங்குவது நல்லது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 185 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,480 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்த வெள்ளி, 2ஆம் தேதி விலை மாறாமல் இருந்தது, ஆனால் நேற்று முன் தினம் 5 ரூபாய் கூடிவிட்டது. இன்று எந்த ஒரு விலை மாற்றமும் இல்லாமல் விற்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் தங்கம், வெள்ளி விலை வேகமாக உயர்ந்தது. ஆனால் செப்டம்பரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகமாக தங்கம் விலை காணப்படுகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயர தான் போகிறது என கூறும் நிபுணர்கள் இந்த விலை குறைவை வாய்ப்பாக கருத வேண்டும் என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
