கொழும்பு – பொரலஸ்கமுவவின் புலத்சிங்கல மாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, இன்று இரவு (04) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது, கொல்லப்பட்ட நபர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 74 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை, கொலை செய்யப்பட்டவர், “கொஸ் மல்லி” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் செயற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய பொரலஸ்கமுவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

