ஸ்மார்ட்போன் தயாரித்த நிறுவனத்திற்கு… ஏவுகணை தயாரிக்கும் கனவு!? Dixon-ன் அடுத்த மெகா பிளான்!
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ் இதுநாள் வரையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் அதனை சார்ந்த உதிபாகங்களை மட்டுமே தயாரித்து வந்த நிஸையில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல திட்டமிட்டு உள்ளாதாக இந்நிறுனத்தின் தலைவர் சவுரப் குப்தா தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் டிக்சன் டெக்னாலஜி அடுத்தக்கட்டமாக ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு துறை, ஆட்டோமொபைல், மருத்துவம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகள் என அதிக மதிப்புள்ள பொருட்கள் பிரிவுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக டிக்சன் டெக்னாலஜிஸ் உயர உள்ளது.

சமீபத்தில் DRDO உருவாக்கியுள்ள ஏவுகணை அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் தனியார் நிறுவனங்கள் ஏவுகணை தயாரிக்க முடியும். இதை டிக்சன் டெக்னாலஜிஸ் வாய்ப்பாக பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் பாதுகாப்பு துறைக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பது என்பது ஸ்மார்ட்போன் தயாரிப்போலாகிவிட்டதால் சியோமி, ஹூவாய், பாக்ஸ்கான் போன்றவை கார் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இதனால் சரியான கூட்டணி கிடைத்தால் தற்போது ஒப்பந்த உற்பத்தியாளர்கள் அனைவரும் எலக்ட்ரிக் கார், பைக், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயாரிக்க முடியும் என்பதால் டிக்சன் டெக்னாலஜிஸ் அடுத்தடுத்து புதிய துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் டிக்சன் டெக்னாலஜிஸ் IT ஹார்ட்வேர், தொலைத்தொடர்பு, ஸ்மார்ட்போன் துறைகளில் கூட்டணி நிறுவனங்களை விரிவுபடுத்துவதுடன், ஏற்றுமதியையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் கூட்டணி மூலம் கேமரா மாட்யூல் உற்பத்தி திறனை தற்போதைய 7 கோடி யூனிட்டுகளில் இருந்து 18-19 கோடி யூனிட்டுகளாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், தைவானின் Gemtek Technology நிறுவனத்துடன் 60:40 கூட்டணியில் Optical Transceiver தயாரிக்கும் திட்டத்தையும் Dixon முன்னெடுத்து வருகிறது.
