• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Election Breaking Live | ஜூன் 9 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
Election Breaking Live | ஜூன் 9 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



June 6, 2024, 3:59 pm IST

முக்கிய இலாக்காக்களை தக்கவைக்கும் பாஜக

பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளை பாஜக தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விமான போக்குவரத்து துறை மற்றும் எஃகு ஆகிய துறைகளை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN முக்கிய இலாக்காக்களை தக்க வைக்கும் பாஜக#BJP #Telugudesamparty #Loksabhaelection2024 #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/RTRQoNHmsm

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 6, 2024

June 6, 2024, 3:43 pm IST

வயநாடா? ரேபரேலியா? – ராகுல் முக்கிய முடிவு

இன்று மாலை 5 மணியளவில் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் எந்த தொகுதியில் எம்பியாக பதவியேற்பது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

June 6, 2024, 3:36 pm IST

8 ஆம் தேதி கூடுகிறது காங். கமிட்டி

வரும் சனிக்கிழமை (8 ஆம் தேதி) காங்கிரஸ் கமிட்டி கூடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விளம்பரம்
June 6, 2024, 3:26 pm IST

ஜூன் 9 ஆம் தேதி மோடி பதவியேற்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

#JUSTIN
வரும் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி,
3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் #Pmmodi #PM #Inaugurationceremony#News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/w8pu9FBI39

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 6, 2024

June 6, 2024, 3:13 pm IST

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியா? – அண்ணாமலை விளக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவில் ஈபிஎஸ்க்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் கட்சியில் ஏதோ பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.  கோவை மக்கள் அதிமுகவை புறக்கணித்துவிட்டார்கள்” என்று பேசினார்.

June 6, 2024, 2:53 pm IST

மோடியிடம் நிதிஷ்குமார் வைத்த புதிய கோரிக்கைகள்

பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பாஜகவிற்கு நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தை உரிய ஆலோசனைக்கு பிறகு அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பாஜகவிடம்  நிதிஷ் முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பாஜகவிற்கு நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் #BJP #Agnipath #Nitishkumar #Election2024 #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/gQmi4XkGVL

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 6, 2024

விளம்பரம்
June 6, 2024, 1:08 pm IST

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் தேதியில் மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்று கிழமை பதவியேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் பாஜக கூட்டணி கட்சி எம்.பிகள் கூட்டத்தில் பிரதமராக தேர்வாகிறார் நரேந்திர மோடி

June 6, 2024, 1:03 pm IST

எதிர்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி?

விரைவில் நடக்க உள்ள காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை தலைவராக ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்பு. ராகுல் காந்தியை எதிர்கட்சி தலைவராக்க கட்சிக்குள் பலரும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

June 6, 2024, 11:29 am IST

விஜய பிரபாகரன் தோற்கவில்லை; திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு பேசுகையில், தேர்தலில் அதிமுக -தேமுதிக கூட்டணி 1 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நன்றி” என தெரிவித்தார்.

மேலும், விஜய பிரபாகரன் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அதனால்தான் சொல்கிறேன். விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார்.” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விளம்பரம்
June 6, 2024, 11:03 am IST

புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள் பதவிகள் மற்றும் எந்த துறை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.

June 6, 2024, 10:50 am IST

உ.பியின் உணர்வுள்ள மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரியங்கா காந்தி

உத்திரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள். கடினமான நேரங்களிலும் போராடும் துணிவை காட்டினீர்கள். நீங்கள் சித்ரவதை செய்யப்பட்டீர்கள், பொய் வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டீர்கள், சிறையில் அடைக்கப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் பயப்படவில்லை. தேர்தல் பொதுமக்களுடையது, போராடுவதும், வெற்றி பெறுவதும் பொதுமக்கள் என்று பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

June 6, 2024, 10:37 am IST

அண்ணாமலை தோல்வி – மொட்டை அடித்து கொண்ட பாஜக நிர்வாகி

விளம்பரம்
June 6, 2024, 10:34 am IST

3 கேபினட் அமைச்சர் பதவி கேட்கும் ஐக்கிய ஜனதா தளம்

பாஜக கூட்டணி அரசில் முக்கிய அமைச்சர் பதவிகளை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது. ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது.

June 6, 2024, 10:34 am IST

மக்களவை சபாநாயகர் பதவி கேட்கும் தெலுங்கு தேசம்

மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசத்திற்கு வழங்க சந்திரபாபு நாயு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட 4 கேபினட் மற்றும் 2 இணை அமைச்ர்கள் என மொத்தம் 6 அமைச்சர்கள் பதவியையும் சந்திரபாபு நாயடு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • First Published : June 6, 2024, 10:31 am IST



Read More

Previous Post

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

Next Post

Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்!-t20 world cup marcus stoinis power packed performance guides australia to 39 run win over oman

Next Post
Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்!-t20 world cup marcus stoinis power packed performance guides australia to 39 run win over oman

Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்!-t20 world cup marcus stoinis power packed performance guides australia to 39 run win over oman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin