ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் பிலிப் சால்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்த சம்பவம் கொல்கத்தா அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என இரண்டு பொறுப்புகளிலும் அதிரடியாக செயல்பட்டு தனது திறமையை பிலிப்ஸ் சால்ட் நிரூபித்தார். இந்நிலையில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தா அணிக்காக 12 இன்னிங்ஸில் விளையாடியுள்ள பிலிப் சால்ட் 435 ரன்கள் குவித்துள்ளார். அவரது அட்டகாசமான விக்கெட் கீப்பிங் அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியது. பவர் ப்ளே ஓவர்களில் குறைந்த பந்துகளில் அதிரடியாக பிலிப் சால்ட் ரன்களை குவித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு பல போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைத்தது.
தற்போது அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முக்கியமான சூழலில், பிலிப் சால்ட் தாயகமான இங்கிலாந்து திரும்பி உள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராக பிலிப் சால்ட் இங்கிலாந்து திரும்பியுள்ளார். கொல்கத்தா அணிக்கு லீக் சுற்றில் ஒரே ஒரு போட்டி மீதம் உள்ளது. அந்த போட்டியில் பிலிப் சால்ட்டுக்கு பதிலாக மாற்றுவீரர் யாரை களம் இறக்குவது என்று கொல்கத்தா அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
குவாலிஃபையர் 1 சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்று இருக்கிறது. இதன் மூலம் அந்த போட்டியில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் கொல்கத்தா அணி மோதும். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி, 19 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)