மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க நிலத்தை அடிக்கடி ஆழமாக உழுவதைத் தவிர்க்க வேண்டும். மாட்டுச்சாணம், ஆட்டு எரு, மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், சணப்பு, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை விதைத்து, அவை பூக்கும் நிலையில் இருக்கும்போது மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்கலாம்.

