(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஜே.டி.டி (JDT) கால்பந்து ஆட்டத்தை நேரில் கண்டு களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற ஜே.டி.டி – ஸ்டார் சிட்டி எஃப்சி (JDT vs Star City FC) அணிகளுக்கு இடையிலான இந்த விறுவிறுப்பான ஆட்டத்தை, தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி மற்றும் ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.


விளையாட்டு அரங்கிற்கு நேரடியாகச் சென்று கால்பந்து போட்டையைக் காண்பது இதுவே முதல் முறை என்பதால், பல மாணவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு வாழ்நாள் நினைவாக அமைந்தது.
த்தகைய முயற்சிகள் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, ‘பங்சா ஜோகூர்’ (Bangsa Johor) என்ற ஒற்றுமை உணர்வையும் மேலோங்கச் செய்துள்ளது.


ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், ஜே.டி.டி அணி 7–0 என்ற கோல் கணக்கில் எதிரணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



