நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்து; “தங்கத்தை நகைகளாக வைத்திருப்பதைவிட, தங்கப் பத்திரமாகவும், கட்டியாகவும், நாணயமாகவும் வைத்திருப்பதுமே சிறந்தது. காரணம், நகையாக வாங்கும்போது, அதில் செய்கூலி, சேதாரம் என பல இருக்கிறது. ஆனால், கட்டியாகவோ அல்லது நாணயமாகவோ இருக்கும்போது அந்த செலவு இல்லை. குறிப்பாக தங்கம் 12 கேரட் முதல் 24 கேரட் வரை உள்ளது. இதில், 22 அல்லது 24 கேரட் தங்கம்தான் சிறந்தது.

