அன்னை அபிராமியை நோக்கி, அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களே அபிராமி அந்தாதியாக நாம் போற்றுகின்றோம். இந்த 100 பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரும் என்றாலும், 100 பாடல்களையும் வர் ஒருவர் தினமும் பாடுகிறோமோ அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கும். விதியையே மாற்றி அமைக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக அபிராமி அந்தாதியில் குறிப்பிட்டுள்ள 40, 59 மற்றும் 75-வது பாடல்களின் வரிகளை தினமும் காலையில் பாடினால் தலைவிதி நிச்சயம் மாறும் என சொல்லப்படுகிறது. அந்த 3 பாட்லகள் மற்றும் அவற்றின் சுருக்கமான பலன்கள் இதோ.
அபிராமி அந்தாதி :
1. பாடல் 40 ( பூர்வ புண்ணியம் பலனை கிடைக்க)
பாடல்:
“வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே”.
பொருள்:
ஒளிதிகழும் நெற்றியில் கண்ணைக் கொண்டவளே, தேவர்கள் அனைவரும் வந்து வணங்க விரும்பும் எம்பெருமாட்டியே, அறியாமை கொண்ட நெஞ்சினருக்கு எளிதில் கிடைக்காதவளே, என்றும் கன்னித் தன்மையவளான உன்னை நினைக்கின்ற இந்த அன்பைப் பெறுவதே நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாகும்.
2. பாடல் 59 (பிள்ளைகள் நலம் பெற)
பாடல்:
“தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே”.
பொருள்:
அபிராமித் தாயே! உன்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று அறிந்தும் உன் தவநெறிகளை என் நெஞ்சில் முழுமையாக நினைக்கவில்லை. கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் ஏந்தியவளே, பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய தாய்மார்கள், தம் குழந்தைகள் அறியாமை செய்தாலும் அவர்களை மன்னித்துக் காப்பது போல நீயும் என்னைக் காப்பாயாக.
3. பாடல் 75 (விதியை வெல்ல / தீவினைகள் நீங்க)
பாடல்:
“தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயார் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே”.
பொருள்:
பெரிய மலைகளையும், உப்பு நிறைந்த கடல்களையும், பதினான்கு உலகங்களையும் தன் திருவுந்தியில் படைத்தவள் அபிராமி. மணம் வீழும் மலர்களை அணிந்த குழல் கொண்டவளான அந்த அன்னையின் திருமேனியைத் தங்கள் சிந்தையில் எப்போதும் நினைப்பவர்கள், தாயின் அரவணைப்பு இல்லாமலேயே கற்பக விருட்ச நிழலில் தங்கும் பேறு பெறுவார்கள்; மண்ணில் மீண்டும் பிறக்கும் பிறவித் துயரமும் நீங்கி அழிவற்ற நிலை அடைவார்கள்.



