• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

FQL, VG டிரேடிங் மோசடி.. ரூ.15 லட்சத்தை இழந்த விவசாயி தற்கொலை.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்! | Farmer Dies by Suicide After Losing Money in FQL and VG Online Trading Scam Near Madurai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
FQL, VG டிரேடிங் மோசடி.. ரூ.15 லட்சத்தை இழந்த விவசாயி தற்கொலை.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்! | Farmer Dies by Suicide After Losing Money in FQL and VG Online Trading Scam Near Madurai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Tuesday, September 1, 2026, 12:24 [IST]

திண்டுக்கல்: மதுரை அருகே நடந்த FQL, VG ஆன்லைன் டிரேடிங் மோசடியில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை இழந்த நிலையில், நத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிலிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்த விவசாயியின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் FQL மற்றும் VG செயலி மூலமாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மிகப்பெரிய ஆன்லைன் மோசடி நடந்திருக்கிறது. ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருகிறோம் என்று கூறியதால், ஏராளமானோர் நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிலம், நகையை விற்று முதலீடு செய்துள்ளனர்.

Online Trading Scam

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த விவசாயி ஒருவர் விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த கும்பகோணம் மகன் ராசு. 25 வயது விவசாயியான இவர் FQL, VG ஆன்லைன் செயலி
வழியாக அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.15 லட்ச வரை முதலீடு செய்திருக்கிறார்.

இதன்பின் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை அடுத்து விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரது உறவினர்கள் சடலத்துடன் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலை வத்திபட்டி பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் நத்தம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உறவினர்கள் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்பாக இருந்தது. இதன்பின் போலீசார் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, ராசு உடலை உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

English summary

Online Trading Scam: Farmer Dies by Suicide After Losing Money in FQL and VG Online Trading Scam Near Madurai

Read More

Previous Post

ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் – சட்டப் போராட்டம்

Next Post

Gold Price | தலைகீழாக மாறும் தங்கம் விலை? ஒரு லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ஆய்வாளர்கள் கணிப்பு!

Next Post
Gold Price | தலைகீழாக மாறும் தங்கம் விலை? ஒரு லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ஆய்வாளர்கள் கணிப்பு!

Gold Price | தலைகீழாக மாறும் தங்கம் விலை? ஒரு லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ஆய்வாளர்கள் கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin