கோலாலம்பூர்:
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய தின உரையின்போது, RON95 பெட்ரோலுக்கான புடி மடானி மானிய பெட்ரோலுக்கான ஒதுக்கீட்டை 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராகவும், புடி டீசல் ஒதுக்கீட்டை 300 லிட்டரிலிருந்து 400 லிட்டராகவும் பிரதமர் Datuk Seri அன்வார் இப்ராஹிம் உயர்த்தியுள்ள அறிவிப்பு, சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் இந்தச் சமகால நடவடிக்கை மாதந்தோறும் நிதிச் சேமிப்பை வழங்குவதோடு, வேலைக்குச் செல்லும் தனியார்ப் பணியாளர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதாகப் பயன்பெறுபவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, தொலைதூரப் பயணங்களுக்கும் தினசரி வேலைகளுக்கும் இது போதுமானதாக இருப்பதாகப் பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதனிடையே, வியாபாரிகள் சிலர், இந்த உயர்வு தங்களது அன்றாட இயக்கச் செலவுகளையும் தளவாடச் சுமைகளையும் குறைத்து, விற்பனை விலையை உயர்த்தாமல் சீராகப் பராமரிக்க உதவுவதாகத் தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி, எரிபொருள் மானியங்களை முறையான இலக்குடன் விநியோகிக்க இந்த அரசாங்கத் திட்டம் உறுதுணையாக அமைகிறது.
The post புடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

