வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பேடார் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வேலன் சுவாமிகள்
‘வலிந்து காணாமலாக்கப்படுவது என்பது மிகவும் வேதனையான துன்பியலான விடயம் ஒரு மனிதனுடைய வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. அந்த மனிதனுக்கு நிகழ்த்தப்படவிருந்த சித்திரவதைகளிலிருந்து யார் சித்திரவதை செய்கிறார்களோ அவர்கள் காப்பாற்றப்படுகின்றார்கள்.
உறவை பிரிந்து அந்த உறவிற்கு என்ன நமந்தது அவர்கள் உயிரோட இருக்கின்றாரா இல்லையா என்கின்ற அந்த வேதனையோடு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தவிக்கின்ற தவிப்பு வேதனை என்பது ஒரு ஆன்மீக பிரதிநிதியாக மிகவும் ஆழமான வலியை கொண்டிருக்க்கூடியது.
எம்முடைய தாயகத்தித்தில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் நீண்ட பயணமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
உலகத்திலேயே வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய இரண்டாவது அதிகமான தொகையை இலங்கை நாடு கொண்டிருக்கிறது.
2009 ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தயகத்திலே எங்களுடைய தாய்மார்கள் வீதிகளிலே தொடர்ந்து போராடுவதும் சிறிலங்கா அரசினுடைய அராஜகமான கட்டமைப்புக்கள் சிறிலங்கா காவல்துறையினராக இருக்கட்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு துறையினராக இருக்கட்டும் அவர்களுடைய அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் ஏற்கனவே உறவகளை பிரிந்தவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
வேலன் சுவாமிகள் உரை 03.27
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

