Last Updated:
இந்தப் பெருங்காய பொடிகளில் 15 சதவீதத்திற்கும் மேல் மாவுச்சத்து இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரமற்றது என கண்டறியப்பட்டதால் எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பெருங்காயப் பொடி விற்பனைக்கு தடை விதித்து, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெருங்காயப் பொடிகளை ஆய்வு செய்ததில் தவறாக பிராண்ட் செய்யப்படுவதும், தரம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


