• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வட்டி குறைவாக இருந்தால்.. ஹோம் லோனை எத்தனை முறை வேறு வங்கிக்கு மாற்றலாம்? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! | Should You Transfer Your Home Loan to Another Bank? Check These Factors First

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வட்டி குறைவாக இருந்தால்.. ஹோம் லோனை எத்தனை முறை வேறு வங்கிக்கு மாற்றலாம்? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! | Should You Transfer Your Home Loan to Another Bank? Check These Factors First
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட்டி குறைவாக இருந்தால்.. ஹோம் லோனை எத்தனை முறை வேறு வங்கிக்கு மாற்றலாம்? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

இன்றளவும் தங்கள் சொந்த வீட்டு கனவை நினைவாக்கிக் கொள்ள ஹோம் லோன்கள் தான் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் இது ஒரு நீண்ட கால கடன் என்பதால் அதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல விஷயங்களை ஆராய வேண்டும். வட்டி விகிதம், அபராத கட்டணங்கள் உள்ளிட்ட விஷயங்களை பார்த்து பின்னரே வங்கியை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை தெரியாமல் நீங்கள் கூடுதல் வட்டி வசூலிக்கும் வங்கியில் ஹோம் லோன் பெற்றுவிட்டீர்கள் என்றாலும்.. பிரச்சனை இல்லை. அதற்காகத்தான் ஹோம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் என்ற ஆப்ஷன் இருக்கிறது.

ஹோம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் என்றால் என்ன?: நீங்கள் ஏற்கனவே ஒரு வங்கியில் கடன் வாங்கி இருந்தால்.. அந்தக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தான் இந்த ஹோம் லோன் டிரான்ஸ்ஃபர். ஒரு சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. எத்தனை முறை வேண்டுமானாலும் ஹோம் லோனை வெவ்வேறு வங்கிக்கு மாற்ற முடியும்.

வட்டி குறைவாக இருந்தால்.. ஹோம் லோனை எத்தனை முறை வேறு வங்கிக்கு மாற்றலாம்? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

இதற்கு எந்தவித தடையும் ஆர்பிஐ தரப்பில் விதிக்கப்படவில்லை. ஆனால் நீங்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உங்கள் கடனை மாற்றும் போது அது உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொண்டு மாற்ற வேண்டும். உதாரணமாக நீங்கள் கடன் வாங்கி இருக்கும் வங்கியில் வட்டி சற்று கூடுதலாக இருக்கிறது என்றால் மற்றொரு வங்கியில் குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

ஹோம் லோனை வேறு வங்கிக்கு மாற்றுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

லோனை மாற்றுவதற்கான கட்டணங்கள்: ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு ஹோம் லோனை கட்டணமின்றி மாற்றி விட முடியாது. இதற்கும் ட்ரான்ஸ்ஃபர் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. வேறு வங்கியில் வட்டி குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும் ட்ரான்ஸ்பரின் போது பிராசசிங் கட்டணம், டெக்னிக்கல் வெரிஃபிகேஷன் கட்டணம், ஆவணக் கட்டணம் போன்ற பலக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இந்த செலவுகளை விட வட்டியிலிருந்து கிடைக்கும் சேமிப்பு அதிகமாக இருந்தால் ஹோம் லோனை மாற்றலாம்.

கடன் காலத்தை கவனியுங்கள்: பொதுவாக ஹோம் லோன் பெற்று கடனை திருப்பிச் செலுத்தும் தொடக்கத்தில் வட்டி அதிகமாக இருக்கும். ஆனால் கடனை முடிக்கும் போது வட்டி விகிதம் குறையத் தொடங்கும். அசலில் அதிகம் வரவு வைக்கப்படும். எனவே கடன் காலத்தின் தொடக்கத்தில் வட்டி குறைவாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் வேறு வங்கிக்கு கடனை மாற்றலாம். ஆனால் கடன் முடியும் நேரத்தில் ட்ரான்ஸ்ஃபர் செய்வது அவ்வளவு பெரிய மாற்றத்தைத் தராது.

அசல் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பாருங்கள்: சிலர் மாதா மாதம் ஈஇஎம்ஐ குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடன் காலத்தை அதிகரித்திருப்பார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஈஎம்ஐ செலுத்தியும் நிலுவை தொகை அதிகமாகவே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வட்டி குறைவாக இருக்கிறதே என்பதற்காக வேறு வங்கிக்கு மாற்றலாம். அப்போது உங்களுக்கு அது சேமிப்பாக இருக்கும். ஆனால் நிலுவைத் தொகை குறைவாக இருக்கும் போது வேறு வங்கிக்கு மாற்றுவது பெரிதாக பலனளிக்காது.

வேறு வங்கிக்கு கடனை மாற்றுவதற்கு முன்பு உங்களுடைய வங்கியிலேயே வட்டியை குறைக்க முடியுமா? என்ற பேசிப் பாருங்கள். வங்கிகள் ஒப்புக்கொண்டால் தேவையற்ற அலைச்சலும், ஆவணச் செலவுகளும் மிச்சமாகும்.

Share This Article

Story first published: Saturday, August 29, 2026, 11:15 [IST]

Other articles published on Aug 29, 2026

Read More

Previous Post

“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் இந்துவாக இருக்கமாட்டான்” – மோகன் பகவத் பேச்சு | “If You Think There Should Be No Muslims in Bharat, You Are Not Hindu”: RSS Chief Mohan Bhagwat

Next Post

பினாங்கில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்களுக்கு மேலும் 4.6 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு அன்வார் ஒப்புதல் – Malaysiakini

Next Post

பினாங்கில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்களுக்கு மேலும் 4.6 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு அன்வார் ஒப்புதல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin