சந்திரேசகரன் சொன்னதே இவரும் சொல்றாரு.. ஹெச்டிஎப்சி வங்கி சிஇஓ சசிதர் ஜகதீஷன் அக்டோபர் உடன் ‘பை பை’!
இந்தியாவின் முன்னணி தனியார் வாங்கியாக திகழும் ஹெச்டிஎப்சி கடந்த சில மாதங்களாக பல்வேறு நிர்வாக பிரச்சனையின் காரணமாக பெரும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ-வான சசிதர் ஜகதீஷன் இன்று நடந்த நிர்வாக கூட்டத்தில் தனக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் சசிதர் ஜகதீஷன்.

இதேபோல் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சந்திசேகரனுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பதில் நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் போராடி வந்த நிலையில் தானாக முன்வந்து சந்திரசேகரன் தனதுக்கு பதவி உயர்வு வேண்டாம் என தெரிவித்தார்.
சசிதர் ஜகதீஷன் 2020ஆம் ஆண்டு ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். இவர் ஆதித்யா பூரிக்கு பின்பு இப்பதவிக்கு வந்த காரணத்தில் முதலீட்டு சந்தையிலும், வங்கியில் துறையில் கூடுதலாக கவனிக்கப்பட்டார்.
இவர் தலைமையில் தான் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி லிமிடெட் இணைக்கப்பட்டு மிகப்பெரிய மாற்றத்தை செய்து நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக மாறியது.
ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது இதில் முக்கியமாக மகாராஷ்டிர சாலை வளர்ச்சி கழகத்தின் வைப்பு நிதியில் செய்த குளறுபடி, நான் எக்ஸ்கியூடிவ் சேர்மன் அதானு சக்கரவர்த்தி திடீர் ராஜினாமாவும் அவர் கூறிய கரணங்களும், காலாண்டு முடிவுகளில் வெளியான மொத்த வட்டி விளிம்பு குறைந்து, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தவறான திட்டங்களை பரிந்துரை செய்து பெரும் முதலீட்டு இழப்புக்கு தள்ளப்பட்டது என பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெளியானது.
இதனால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 27.41 சதவீதம் சரிந்து இவ்விங்கியில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை கொடுத்தது.
ஹெச்டிஎப்சி வங்கியை தாங்கிப்பிடிக்க இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பெரும் தொகையை முதலீடு செய்து பங்குகளை வாங்க உள்ளது.
எல்ஐசி நிறுவனம் ஏற்கனவே ஹெச்டிஎப்சி வங்கியில் முதலீடு செய்து சுமார் 4.11 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், தற்போது இந்த பங்கு அளவை 9.99 சதவீதம் வரையில் உயர்த்த சமீபத்தில் ஆர்பிஐ அனுமதி கொடுத்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியில் சசிதர் ஜகதீஷனின் கடைசி நாள் அக்டோபர் 26, 2026 என்பதால் இவ்வங்கி நிர்வாகம் விரைவில் புதிய தலைவரை சேர்வு செய்யும் பணிகளை வேகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

