முறையான திட்டமிடலுடன் குடைமிளகாயை சாகுபடி செய்தால் ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் ஈட்ட முடியும். குறிப்பாக, பசுமைக்குடில் முறையில் சாகுபடி செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி, அனைத்து பருவங்களிலும் குடைமிளகாயை வளர்க்க முடியும். பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடைமிளகாய்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், தரமான விளைச்சலைப் பெறும் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.


