• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிரியா மீதான தடை.. 47 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்க நீக்கியது.. 1979-ல் என்ன நடந்தது?! | US Ends 47-Year Blockade: Syria Officially Removed from State Sponsors of Terrorism List

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிரியா மீதான தடை.. 47 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்க நீக்கியது.. 1979-ல் என்ன நடந்தது?! | US Ends 47-Year Blockade: Syria Officially Removed from State Sponsors of Terrorism List
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரியா மீதான தடை.. 47 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்க நீக்கியது.. 1979-ல் என்ன நடந்தது?!

ஈரான், கியூபா, வட கொரியா நாடுகளை போலவே 40-50 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று. 2024 டிசம்பரில் சிரியா நாட்டில் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அகமது அல்-ஷாரா தலைமையிலான புதிய அரசு, இந்த நிலையை மாற்ற முயற்சி செய்தது.

இதன் வாயிலாக அகமது அல்-ஷாரா அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சிரியாவின் சர்வதேச உறவுகளை மீண்டும் கட்டமைக்க முயன்று வருவதாகவும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிரியா மீதான தடை.. 47 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்க நீக்கியது.. 1979-ல் என்ன நடந்தது?!

இந்த நிலையில் அமெரிக்கா, சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. சிரியா 1979ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.

புதிய சிரிய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மேம்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், சர்வதேச நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்ததன் விளைவாக தற்போது இது நடந்துள்ளது.

இப்பட்டியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட நிதியியல், வர்த்தக தடைகள் நீக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷாரா அந்நாட்டில் இருந்து விசா கார்டு மூலம் பேமெண்ட் செய்தார். இதன் மூலம் அமெரிக்க நிதி நிறுவனங்கள் சிரியா மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் சிரியாவை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான தனது முடிவை அதிகார்பூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து 45 நாட்கள் இந்த முடிவை அமெரிக்க நாடாளுமன்றத்திழ் ஆய்வுக்கு உட்படுத்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

1979-ல் ஏன் சிரியா சேர்க்கப்பட்டது?

அப்போது சிரியா நாட்டின் அதிபராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் அரசு, இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்ட ஆயுதக் குழுவிற்கு ஆதரவு அளித்ததாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது. இதன் அடிப்படையில் 1979-ல் சிரியா இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஹஃபீஸ் அல்-அசாத் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷார் அல்-அசாத் ஆட்சிக்கு வந்தபோதும், சிரியாவின் பயங்கரவாத ஆதரவு நாடு என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்ந்தது.

சிரியா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் State Sponsors of Terrorism பட்டியலில் தற்போது ஈரான், கியூபா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே உள்ளன.

Share This Article

English summary

US Ends 47-Year Blockade: Syria Officially Removed from State Sponsors of Terrorism List

US Ends 47-Year Blockade: Syria Officially Removed from State Sponsors of Terrorism List — சிரியா மீதான தடை.. 47 ஆண்டுகளுக்கு பின்பு அமெரிக்க நீக்கியது.. 1979-ல் என்ன நடந்தது?!

Story first published: Thursday, August 27, 2026, 21:32 [IST]

Other articles published on Aug 27, 2026

Read More

Previous Post

நேபாளத்தில் பசுமையான சூழலில் மலை மீது நின்று தமிழர்கள் கடைசியாக எடுத்த புகைப்படம் வைரல் | Last photograph of tamil people who went missing in Nepal Floods

Next Post

கர்ப்ப காலத்திலும் கடுமையான உடற்பயிற்சி செய்யும் சமந்தா… “நீங்களாக இதை செய்யாதீங்க” – வைரலாகும் பதிவு | Makkal Osai

Next Post
கர்ப்ப காலத்திலும் கடுமையான உடற்பயிற்சி செய்யும் சமந்தா… “நீங்களாக இதை செய்யாதீங்க” – வைரலாகும் பதிவு | Makkal Osai

கர்ப்ப காலத்திலும் கடுமையான உடற்பயிற்சி செய்யும் சமந்தா... “நீங்களாக இதை செய்யாதீங்க” - வைரலாகும் பதிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin