அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது.
அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் நாட்கள்
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

