LPG, LNG: கதவை மூடிய வளைகுடா நாடுகள்.. நேரா இந்தியா சென்ற இடம் எது தெரியுமா..?
இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கும் எரிபொருள் தேவையை கிட்டத்தட்ட 70-80 சதவீதத்தை வெளிநாட்டு இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சப்ளை ஈரான் போர் காரணமாக மொத்தமாக முடங்கிய காரணத்தால் இந்தியா தனது எல்பிஜி, எல்என்ஜி தேவையை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளது.
கப்பல் போக்குவரத்து துறையின் முக்கிய கண்காணிப்ப அமைப்பான கெப்லர் வெளியிட்டுள்ள தரவுகள் படி கடந்த 6 மாதத்தில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எரிவாயு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியா சுமார் 0.62 மில்லியன் டன் எல்பிஜியை அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ளது. இது ஜூலை மாதம் 0.89 மில்லியன் டன், இது இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 73 சதவீதமாகும்.
ஜூலை மாதம் மிகவும் முக்கியமாக எப்போது இந்தியாவுக்கு எல்பிஜி சப்ளை செய்யும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு இணையாக 0.891 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது. இதேவேளையில் வளைகுடா நாடுகளான UAE-யில் இருந்து வரும் எல்பிஜி வெறும் 1,40,000 டன்னாக குறைந்துள்ளது. இதுவே கத்தாரில் இருவரும் அளவு 60000 டன்னாக இருக்கிறது.
இந்தியாவுக்கு மிகப்பெரிய சப்ளையாராக இருக்கும் கத்தார் நாட்டில் இருந்து வரும் எரிவாயு அளவு ஏப்ரல் மாதத்தில் ஜீரோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஈரான் போர் துவங்கியதில் இருந்து எரிபொருள் சப்ளையர் நாடுகளின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி மத்திய அரசு உலக நாடுகளில் அடுத்தடுத்து உருவாகியுள்ள போர் சூழ்நிலையில் எரிபொருள் சப்ளையை வருடம் முழுவதும் எவ்விதமான தடையும் இல்லாமல் உறுதி செய்யும் வரையில், திரவ இயற்கை எரிவாயுக்குவான சப்ளையர் எண்ணிக்கையை 6ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் கச்சா எண்ணெய்கான சப்ளையர் நாடுகளின் எண்ணிக்கையை 27ல் இருந்து 41 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக எழுத்துப்பூர்வமாக சுரேஷ் கோபி தெரிவித்தார்.
அதிகப்படியான நாடுகளில் இருந்து எரிபொருள் பெறுவது மூலம் சப்ளை பிரச்சனை மட்டும் அல்லாமல் விலை உயர்வு பிரச்சனையையும் தவிர்க்க முடியும் எனவும் ராஜிய சபாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர், அடுத்தாக அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் என அடுத்தடுத்து எரிபொருள் சப்ளையை பாதிக்கும் வகையில் பிரச்சனைகள் வெடித்து வருகிறது.
