• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் விரைந்து தொடங்கப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in மலேசியா
Reading Time: 6 mins read
0
தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் விரைந்து தொடங்கப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் புதிய கட்டிடக் கட்டுமானப் பகுதிக்கு, பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடுவதற்காக தாம் வருகை புரிந்துள்ளதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். பணிகள் மிகவும் சீராக நடைபெற்று வருகின்றன என்பதை தாம் பார்வையிட்டு அறிந்து கொண்டேன். அடிப்படை கட்டமைப்பு பணிகள் ஏற்கெனவே, நிறைவடைந்துள்ளன. தற்போது முதல் தளத்தைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பிறகு கூரை அமைக்கும் பணிகள்,மின்சாரம் உள்ளிட்ட மற்றப் பயன்பாட்டு வசதிகள் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
​

ஆகையால் கட்டுமான பணிகள் மிகவும் சீராக நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்பணிகள் நிறைவடையும் என தாம் நம்புவதாக அவர் கோடிக்காட்டினார். எனவே, கோயில் நிர்வாகக் குழுவிடம், தாம் கட்டளை அளித்துள்ளேன், ஆலயப் பணிகளை பற்றி விரைந்து முடிக்க, கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். அதே வேளையில், இதில் சில தொழில்நுட்ப விஷயங்களும் அடங்கியுள்ளன. அதிகாரிகளுடன் தொடர்ந்து தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
​

கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்), அமைச்சுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார். ஏனெனில், இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் பெரும் ஒத்துழைப்பையும், உதவியையும் நல்கியுள்ளனர். அதே வேளையில், கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு நிதி திரட்டுவது குறித்தும் தாம் கவனம் செலுத்தப் போவதாகவும் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக அவர் மேலும் சொன்னார்.

இதற்காக நிதி திரட்டும் நிகழ்வை நடத்தவுள்ளதாக கோயில் நிர்வாகக் குழு என்னிடம் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் குறித்த தகவல்கள், அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வருகை தந்து எனக்கு விளக்கமளித்த கான்ட்ராக்டர்கள், அதிகாரிகளும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் திட்டம் நிறைவடையும் என நம்புகிறேன். அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தேவஸ்தானத்தின் சார்பில் சில முக்கியக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு ஆலயத்தை மாற்றுவது மற்றும் பாலஸ்தானம் செய்வதற்கான ஆகம விதிமுறைகள் குறித்து அமைச்சரிடம் தெளிவாக விளக்கப்பட்டது. பாலஸ்தானம் செய்வதற்கு உரிய காலநேரமும் வழிமுறைகளும் தேவைப்படுவதால், உடனடியாக ஒரே நாளில் ஆலயத்தை மாற்றம் செய்ய இயலாது என்பது எடுத்துரைக்கப்பட்டது என்று ஆலயத் தலைவர் பார்த்திபன் கூறினார்.

 கட்டிடக் கட்டுமானம் ஒருபுறம் அமைக்கப்பட்டாலும், அதனை முழுமையான தொன்மைச் சிறப்புமிக்க ஆலயமாக உருவாக்குவதற்குச் சிற்பிகளின் பங்களிப்பும் கூடுதல் நிதியும் அவசியமாகிறது. இதற்காகத் தனித் தேவஸ்தானக் குழு அமைக்கப்பட்டு, முறையான வங்கிச் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
​வருங்காலத்தில்பொதுமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பிரமுகர்களின் ஆதரவோடு சிறப்பு இரவு விருந்துபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தின் வரிவிலக்கு சலுகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு முன்பாகத் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தெய்வச் சிலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆலயம் முழுமையாக இயங்கத் தொடங்கும் என நிர்வாகம் சார்பில் தாம் மேலும் குறிப்பிடுவதாக பார்த்திபன் சொன்னார்.

(எஸ்.ஷாண்)



Read More

Previous Post

ஹைதி நாட்டில் ஆயுதக் கும்பல் தாக்குதல்.. 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரம்! | World News (உலக செய்திகள்)

Next Post

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin