
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் 24 எதிர்வாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நௌபார் மௌலவி என அழைக்கப்படும் முகமது இப்ராஹிம் முகமது நௌபார் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.
கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்ற சிறப்பு முவரடங்கிய அமர்வு (வுசயைட-யவ-டீயச) இந்த வழக்கில் எழுத்துபூர்வமான சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதியை நிர்ணயித்திருப்பதுடன், தீர்ப்பை செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த வழக்கானது மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்தின மாரசிங்க, சுஜீவ நிஷ்கங்க மற்றும் இராமநாதன் கண்ணன் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு முவரடங்கிய குழாம் முன்னிலையில் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு, மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர்ச்சியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பானது இந்த வழக்காகும்.
நௌபார் மௌலவி என அழைக்கப்படும் முகமது இப்ராஹிம் முகமது நௌபார் உட்பட 24 எதிர்வாதிகளும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

